கத்தர் காயல் நல மன்றம் சார்பில் இம்மாதம் 25ஆம் தேதியன்று, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா இரண்டாமாண்டு போட்டி, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
(இன்ஷா அல்லாஹ்) எதிர்வரும் 25 - 06 - 2011 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு, எமது கத்தர் காயல் நல மன்றம் சார்பில், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ரா கல்விச்சங்கம் மற்றும் தி காயல் பர்ஸ்ட் டிரஸ்ட் ஒருங்கிணைப்பில், நம் நகரின் அனைத்து மேனிலைப்பள்ளி மாணவ - மாணவியர் கலந்து கொள்ளும், மாபெரும் வினாடி-வினா போட்டி - எல்.கே. மெட்ரிகுலேசன் மேனிலை பள்ளி வளாகத்தில் வைத்து - தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நடைபெற உள்ளது.
இவ்வாண்டு இப்போட்டிகளை - பத்திரிக்கை தொழில்நுட்ப துறையில் உலகளவில் மிக பெரிய நிறுவனமான IFRA வுடைய தெற்கு ஆசியா நிர்வாக இயக்குனர் மக்தூம் முஹம்மத் நடத்த உள்ளார்.
போட்டி விதிமுறைகள்:
*** ஓர் அணிக்கு இரு மாணவர்கள் என பதிவு செய்யவேண்டும். இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்...
*** ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து எத்தனை அணிகள் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்...
*** துவக்கமாக அனைத்து அணிகளும் நுழைவு தேர்வு எழுதுவர் (Preliminary Round). அதிலிருந்து இறுதி போட்டிக்கு 8 அணிகள் தேர்வு செய்யப்படுவர்...
*** குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (கட்ஆஃப் மார்க்) அடிப்படையில் குறைந்தது 7 அணிகள் உள்ளூர் பள்ளிக்கூடங்களை சார்ந்ததாக இருக்கும். ஒரு அணி காயலர்கள் பயிலும் வெளியூர்/வெளிநாடு சார்ந்த பள்ளிக்கூடமாக இருக்கலாம்.
*** குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்பது அனைத்து அணிகளுக்கும் பொருந்தும்...
*** போட்டி ஏற்பாட்டாளர்களின் முடிவே இறுதியானது.
பரிசுகள்:
*** பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள்
*** இறுதிப் போட்டிக்குத் தேர்வாகும் எட்டு அணிகளின் அங்கத்தினருக்கும் பதக்கம்
*** மூன்றாம் இடம் பெறும் அணிக்கு பணப்பரிசு ரூபாய் 2000
*** இரண்டாம் இடம் பெறும் அணிக்கு பணப்பரிசு ரூபாய் 3000
*** முதல் இடம் பெறும் அணிக்கு பணப்பரிசு ரூபாய் 5000
*** வெற்றி பெறும் அணியின் பள்ளிக்கு கோப்பை
போட்டியில், பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்!
போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தமது பள்ளிக்கூடங்களை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |