தமிழகத்தில் பள்ளிகளை நாளை (ஜுன் 18) திறக்கக் கூடாது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் கடந்த ஜூன் 15ம் தேதி துவங்கியது. ஆனால் சமசசீர் கல்வி குளறுபாட்டால், புத்தகங்கள் இல்லாத நிலையில் வகுப்புகள் நடந்து வருகின்றன. மேலும் கல்வி ஆண்டு தாமதமாக துவங்கியது
இதனால் நாளை பல பள்ளிகள் செயல்படும் என அறிவித்திருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை பள்ளிகளை திறக்கக் கூடாது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
1. திருடனுக்கு தேள் கொட்டினது போல்............. posted byzubair (riyadh)[18 June 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5347
என்னடா கொடுமை இது......... மாணவ,மாணவியர்களின் படிப்பின் பொன்னான காலம்கள் வீணடிக்க படுகின்றன. என்னது செய்வதெண்டு தெரியாமல் தவிக்கும் தமிழக அரசு! இப்படி ஒரு சோதனை எந்த அரசுக்கும் நடந்தது இல்லை!
தமிழக முதல்வர் இவைகளுக்கு முழு பொறுபேற்க வேண்டும், தமிழக மக்களிடம் மன்னிப்பும் கேக்க வேண்டும்.
3. நிரந்தர முதல்வர்... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[18 June 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5361
நாம தான் கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றோம்.பசங்கள் எல்லாம் செம ஜாலியாக இருக்கின்றார்கள். போன் போட்டு பேசியதில் அம்மாவை நல்ல புகழ்ந்து தள்ளுகிறானுவோ.
- நீண்ட கோடை விடுமுறை
- பள்ளி திறந்தாலும் நோ பாடம்
- 8 ஆம் வகுப்பு வரை படித்தாலும், மாடு மேய்த்தாலும் பாஸ்
- இலவச பாடபுத்தகம், இலவச சீருடை
- 9 லட்சத்து 12 ஆயிரம் இலவச மடிக்கணணி etc
பொடிசுகள் அனைவர்களுக்கும் ஓட்டு உரிமை கொடுத்தீர்கள் என்றால் அம்மா தான் நிரந்தர முதல்வர்...
5. காலம் பொன் போன்றது posted bysulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA)[18 June 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5366
ஏற்கனவே பதினைந்து நாட்கலுக்கு பிறகு தான் ஸ்கூல்
திரக்கபட்டது. அதில் பதினைத்து நாட்கள் வீணாக போய்விட்டது. இப்போது சமசீர் கல்வி குழுவின் அறிக்கை வரும் வரை பாடம் நடத்த கூடாது என்ற அறிவிப்பு வேற உள்ளது. நம் அருமை மாணவ, மாணவிகளின் பொன்னான நேரங்கள் தான் வீணாகிறது என்பது தான் உண்மை.
இதை நாம் அனைவரும் உணரவேண்டும். காலம் பொன் போன்றது. அது போனால் என்ன விலை கொடுத்தாலும் திரும்ப பெற முடியாது.
8. வேலியே பயிரை மேய்கிறது....! posted bys.s.md meerasahib (riyadh)[18 June 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5378
அன்பு சகோதரர்களே..... நம் மக்களுக்கு படிப்பறிவும், எழுத்தறிவும் கொடுக்க வேண்டிய அரசு.. தான் செய்த தான்தோண்டி தனத்தினால் நம் மக்களின் பொன்னான நேரமும். மகத்தான கல்வியும் வீணடிக்கப்படுகின்றன. என்ன இது.... சரியான கோமாளித்தனம்?
9. கல்வி தரம், வெற்றி சதவிகிதம் குறையும் posted byLebbai (Riyadh)[18 June 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5381
எல்லாம் நாம் வளர்ப்பதில்தான் உள்ளது என்பது உண்மை என்றாலும், ஒரு மாணவருக்கு வாழ்கையில் திருப்புமுனையாக மிக முக்கிய காலம் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலம்தான். இந்த மாணவர்களுக்கு இப்படி லேப்டாப் கொடுத்தால், பள்ளி படிப்பு பாதிக்காதா? என்பதுதான் ஆதங்கம்.
இன்றைய சூழ்நிலையில், பெற்றோர் கட்டுப்பாட்டில் (அறிவுரை கேட்டு செயல்படுத்தும்) உள்ள மாணவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவே...வலியவே ஒரு அரசு இது போன்ற லேப்டாப் கள் கொடுக்கும்போது மாணவர்களின் கல்வி தரம், வெற்றி சதவிகிதம் குறையும் என்பதே என் கருத்து.
மேலும் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சக மாணவர்கள் எல்லோருக்கும் லேப்டாப் கிடைக்கும் பட்சத்தில், நாம் என்ன தான் வீட்டில் கட்டுப்பாடு வைத்தாலும், வெளியில் சக தோழர்களோடு பழகும் சமயத்தில் எவ்வாறு கட்டுபடுத்த முடியும்? (ஒரு சிலர் விதிவிலக்கு). chatting , கேம்ஸ் என்று தான் பொன்னான நேரத்தை கழிப்பார்கள்.
10. சிறப்பு மதிப்பெண் posted byvsm ali (Hetang , Jiangmen , China)[18 June 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 5384
பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்படும் கேள்விகளுக்கு "சிறப்பு மதிப்பெண்" போடுவது போல, இந்த "பாழாய்ப்போன" நாட்களுக்கும் சிறப்பு மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு உண்டு.
"நீயா, நானா, என்ற இவர்களின் அரசியல் சண்டையில், ஒருவேளை, வருடம் பூராவும் பாடங்கள் நடக்கவில்லை என்றாலும், இறுதியில் பரீட்சையை மட்டும் நடத்தி, எல்லோரும் தேர்வு ஆகிவிட்டனர் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்க்கில்லை.. அதனால அதிகம் பேசாதீர்கள் நண்பர்களே.
12. பல நாடகங்கள் அரங்கேறும் posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[18 June 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5389
அம்மாவோ, ஐயாவோ, ரெண்டு பெரும் அரசியல் வியாதிகள்தான்.
இருவருக்கும் இடையில் பாதிக்கபடுவது நாமதானே!!!! இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்? இன்னும் 59 மாதம், பல நாடகங்கள் அரங்கேறும்.
13. ஸ்பெஷல் கிளாஸ் posted byhasbullah mackie (dubai)[19 June 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5402
அன்புள்ள சகோதரர்களே !
ஆய்வு எல்லாம் முடிந்த பிறகு அம்மா ஸ்பெஷல் வகுப்புகள் நடத்தி கொடுத்துள்ள லீவ் நாட்களை சரி செய்து விடுவார்கள். நீங்கள் ஒன்றும் வேதனை பட வேண்டாம்.
நாம படிக்கிற காலத்துல லீவ் கிடைத்தால் சந்தோசப் படுவோம இல்லையா அதே போல இப்ப படிக்கிற பிள்ளைகளுக்கு சந்தோசமா இருந்துட்டு போகட்டுமே .
நம்ம யாரும் அய்யா உண்டாக்கிய புத்தகங்களை பார்வை இடவில்லை.. என்ன தான் இருந்தாலும் ராமாயணம் மகாபாரதம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது இல்லாம இருக்காது .. நம்ம அமைச்சர்களெல்லாம் படிச்சவங்க..
லேப்டாப் கொடுத்தா குட்டிச்சுவரா ஆகி விடுவாங்கன்னு சொன்னாங்க ஆனா அவங்கவங்க வீட்டில சினிமா theatre
இயங்குறத பற்றி வாயை திறக்கமாட்டாங்க..
14. படிப்பு பாதிக்குமா இல்லையா? posted byLebbai (Riyadh)[19 June 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5404
லேப்டாப் கொடுத்தா குட்டிச்சுவரா ஆகி விடுவாங்கன்னு சொன்னாங்க ஆனா அவங்கவங்க வீட்டில சினிமா theatre இயங்குறத பற்றி வாயை திறக்கமாட்டாங்க.... என்று ஒரு நண்பர் சொல்லுகிறார். இது மட்டும் இல்லை அவங்க அவங்க கைகளில் மொபைல் போன் இருக்குது..இப்படியே ஒன்று ஒன்றா சொல்லி கொண்டே போகலாம். டிவி வீட்டில் இருப்பதால் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சினிமா பார்கிறார்கள் என்று முடிவுக்கு வரவேண்டாம். படிப்பின் முக்கிய தருணத்தில் மடிகணினி கொடுத்தால் படிப்பு பாதிக்குமா இல்லையா? அதை பற்றி விவாதிக்கவும். கணிணி உபயோகபடுத்த கூடாது என்றா நான் சொன்னேன். இல்லாவிட்டால் இங்கே கருத்து பரிமாற்ற செய்ய முடியுமா? ஆக உங்கள் முடிவு மடிக்கணிணியால் எந்த பதிப்பும் இல்லை என்பதை நியாயப் படுத்த முயற்சி பண்ணுகிறீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross