காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 வரை நடைபெறுகிறது.
பதிமூன்றாம் நாளான நேற்று, (16.06.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ வழங்கினார்.
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் காணப்படும் குறைபாடுகள், கடமையான வணக்கங்களை நிறைவேற்றுவதில் சமுதாயத்தில் உள்ள அலட்சியம், மத்ஹபுகளின் அவசியம், இமாம்கள் வகுத்துத் தந்த ஃபிக்ஹ் சட்டதிட்டங்களின்படியே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை நேற்றைய உரையில் இடம்பெற்ற செய்திகளாகும்.
நேற்று, இமாம் இப்னு ஹஜர் அல்ஹைத்தமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவுதினமாகும். அதனை முன்னிட்டு, அன்னாரின் வாழ்க்கை வரலாற்று சரித்திர சுருக்க உரையை, மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் வதூத் ஃபாஸீ ஆகியோர் வழங்கினார்.
இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரி,
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நாகூர் மீரான் ஸிராஜீ ஆகியோர் வழங்குகின்றனர்.
தினமும் காலை 09.15 மணிக்கு நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.
http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.
தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.
|