காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் நிர்வாகத்தின் சார்பில், “காயல் ட்ராஃபி 2011” க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள் சென்ற ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாமாண்டு போட்டிகள் 18.06.2011 அன்று (நேற்று) காலையில் துவங்கின. முதல் போட்டியை சொளுக்கு அப்துல் காதிர் துவக்கிவைத்தார்.
முதல் போட்டி: செகண்ட்ஸ் சிசி - டி.சி.டபிள்யு
காலை 09.00 மணிக்குத் துவங்கிய முதல் போட்டியில் டி.சி.டபிள்யு. அணியும், செகண்ட்ஸ் அணியும் களம் கண்டன. டாஸில் வென்ற செகண்ட்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின்
ராகேஷ் 22 ஓட்டங்களும்,
கணேஷ் 17 ஓட்டங்களும்,
நரசிம்மன் 23 ஓட்டங்களும்,
ஜெயகணேஷ் 14 ஓட்டங்களும்,
ராஜா 15 ஓட்டங்களும்,
நவனீதன் ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களும் பெற்றனர்.
ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி 7 வீரர்கள் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் பெற்றது.
டி.சி.டபிள்யு. அணியின்
எட்வின் 1 வீரரையும்,
ராஜ் 2 வீரர்களையும்,
சேவியர் 3 வீரர்களையும்
ஆட்டமிழக்கச் செய்தனர்.
அடுத்து டி.சி.டபிள்யு. அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் அதிகபட்சமாக
எட்வின் 14 ஓட்டங்களும்,
வைட்ஃபீல்ட் 15 ஓட்டங்களும் பெற்றனர்.
70 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அந்த அணியின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தனர்.
செகண்ட்ஸ் அணியின் ராகேஷ் 2 வீரர்களையும்,
ராஜா 2 வீரர்களையும்,
ஜான்டி 1 வீரரையும்,
கணேஷ் 3 வீரர்களையும்,
நரசிம்மன் 1 வீரரையும்
ஆட்டமிழக்கச் செய்தனர்.
இந்த ஆட்டத்தில் செகண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டி: பேர்ள்சிட்டி சிசி - யூத் சிசி
அன்று மதியம் 01.00 மணிக்குத் துவங்கிய இரண்டாவது போட்டியில் பேர்ள்சிட்டி அணியும், யூத் சிசி அணியும் களம் கண்டன.
துவக்கமாக பேட்டிங் செய்த யூத் சிசி அணியின் சார்பில்,
பாலா 11 ஓட்டங்களும்,
பாக்கியராஜ் 19 ஓட்டங்களும்,
ஆஸாத் 23 ஓட்டங்களும்,
சரவணன் 11 ஓட்டங்களும் பெற்றனர்.
முடிவில் அந்த அணி அனைத்து வீரர்களையும் இழந்து 99 ஓட்டங்கள் பெற்றது.
எதிரணியின்
பிரபு 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 வீரரையும்,
கணேஷ் 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும்,
கணேசன் 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும்,
ப்ரதாப் 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும்,
ஜென்ஸன் 5 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும்,
கார்த்திக் 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 வீரரையும்
ஆட்டமிழக்கச் செய்தனர்.
அடுத்து பேர்ள் சிட்டி அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின்
கார்த்திக் 13 ஓட்டங்களும்,
ராஜ் 20 ஓட்டங்களும்,
கணேஷ் 19 ஓட்டங்களும்,
நந்தனராஜ் 19 ஓட்டங்களும்,
ப்ரதாப் 23 ஓட்டங்களும்
பெற்றனர்.
ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 4 வீரர்களை இழந்து 103 ஓட்டங்கள் பெற்றது. எதிரணியின்
சரவணா 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும்,
ரமேஷ் 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 வீரர்களையும்
ஆட்டமிழக்கச் செய்தனர்.
இந்தப் போட்டியில் பேர்ள் சிட்டி அணி வெற்றிபெற்றது.
தகவல்:
போட்டி ஏற்பாட்டுக்குழு சார்பாக,
M.M.ஷாஹுல் ஹமீத்,
மரைக்கார் பள்ளித் தெரு, காயல்பட்டினம். |