காயல்பட்டின பள்ளிக்கூடங்களிடையே ஆக்கப்பூர்வமான போட்டியினை உருவாக்கி, அதன்மூலம் அப்பள்ளிகளை சிறந்த தேர்வு முடிவுகளை அடையச் செய்யும் நோக்கில் 2009ஆம் ஆண்டு முதல் சிறந்த பள்ளிக்கூடங்களுக்கான பரிசுகள் - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் - சார்பாக, சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சியின்போது, வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டும் இப்பரிசு வரும் ஜூன் 24 (வெள்ளி) மாலை ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் வைத்து நடைபெற உள்ள நிகழ்ச்சியின் போது வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுகள் குறித்து கடந்த இரு ஆண்டுகளாக பெறப்பட்ட ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இவ்வாண்டு இப்பரிசுகள் வழங்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு பரிசுகள் இரு வகையாக வழங்கப்படும். அவை - பிரிவுகள்வாரி (Categorywise) மற்றும் ஒட்டுமொத்த வாரியாக (Overall) ஆகும். இது குறித்த முழு விபரம் காண இங்கு அழுத்தவும்.
பிரிவுகள் வாரியாக -
100 புள்ளிகள் வெற்றி சதவீதத்திற்கும்,
100 புள்ளிகள் முதல் வகுப்பு தேர்ச்சி சதவீதத்திற்கும்,
100 புள்ளிகள் 75%. அல்லது அதற்கு அதிகம் பெற்றவர் சதவீதத்திற்கும்,
100 புள்ளிகள் 90% அல்லது அதற்கு அதிகம் பெற்றவர் சதவீதத்திற்கும்
- என கூடியது 400 புள்ளிகள் என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு சிறந்த பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
பிரிவுகள்வாரியாக சிறந்த பள்ளிக்கூடங்கள்...
-- 75 மற்றும் அதற்கு குறைய மாணவர்களை பன்னிரண்டாம் வகுப்பில் கொண்ட பள்ளிக்கூடங்கள் பிரிவில்...
சிறந்த பள்ளிக்கூடம்: - சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி (280.94)
இரண்டாம் இடம்: - சென்ட்ரல் மேனிலைப்பள்ளி (164.37)
மூன்றாம் இடம்: - முஹ்யிதீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி (137.83)
-- 75 மாணவர்களுக்கு மேல் பன்னிரண்டாம் வகுப்பில் கொண்ட பள்ளிக்கூடங்கள் பிரிவில்...
சிறந்த பள்ளிக்கூடம்: - சுபைதா மேனிலைப்பள்ளி (240.70)
இரண்டாம் இடம் : - அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி (217.64)
மூன்றாம் இடம்: - எல்.கே. மேனிலைப்பள்ளி (203.90)
பிரிவுவாரியாக சிறந்த பள்ளிக்கூடங்களுக்கு நினைவு பரிசும், ரூபாய் 5000 ரொக்கமும் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சியின்போது வழங்கப்பட உள்ளன. |