காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 22ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24, 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது.
இவ்விழாவில், கல்லூரியில் மூன்றாண்டு கல்வித் திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு “ஆலிமா சித்தீக்கிய்யா” பட்டம் (ஸனது) வழங்கல்...
சென்னை பல்கலைக்கழகத்தில் அஃப்ஸலுல் உலமா தேர்வெழுதி தேர்ச்சி பெற்றோருக்கு பதக்கம் வழங்கல்...
பள்ளி மாணவியருக்கான தீனிய்யாத் பிரிவில் பயின்று 8 ஆண்டு பாடத்திட்டத்தை நிறைவு செய்த மாணவியருக்கு பட்டம் வழங்கல்...
உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இடம்பெறவுள்ளன.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, அறிவுரை நிகழ்துகிறார்.
குவைத் தஃவா மையத்தின் அழைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் ஜமாலுத்தீன் ஃபாஸீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்புப் பேருரையாற்றுகிறார்.
மாணவியர் தயாரிப்பில் இஸ்லாமிய கண்காட்சி, அலசல் அரங்கம், பட்டிமன்றம், விழிப்புணர்வு நாடகம், பள்ளிக்கூட மாணவியருக்கான தீனிய்யாத் பிரிவின் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இவ்விழாவில் அரங்கேறுகின்றன.
காயல்பட்டினம் நகரின் அனைத்து மகளிரும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வருமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |