பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சி (மெரிட்) பெற்று, உயரிய மேற்படிப்பு கற்க தீராத ஆவலிருந்தும், பொருளாதார நலிவு காரணமாக தமது ஆவலைப் பூர்த்தி செய்ய இயலாத காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு, அவர்களுக்கான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், உணவுக்கட்டணம் உள்ளிட்ட - அக்கல்விக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டணங்களையும் பொறுப்பேற்று கடனாக உதவி வரும் அமைப்பே ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (கஸ்வா).
இவ்வமைப்பின் சார்பில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள உதவித்திட்டங்கள் குறித்து அதன் செயற்குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு:-
நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூலிஹில் கரீம்!
கண்ணியம் மிகுந்த காயல் பதியின் அன்பு மக்கள் அனைவர்களுக்கும் எம் கஸ்வா (KSWA - Kayal Students Welfare Association - Hong Kong) அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் கனிவான ஸலாம்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
ஹாங்காங் நகரில்,13 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் மாலை பொழுதில் நம் காயல் நகரின் இளைய தலைமுறையினர்கள் விளையாட்டாக கூடி பேசும்போது வார்த்தைகள் நம் ஊரின் ஏழை மாணவர்களின் உயர் கல்வி பற்றிய ஒரு சீரிய சிந்தனை பக்கம் திரும்பியது. அந்த ஆழமான கருத்து பரிமாற்றத்திற்கு பின் உருவானதே நமது கஸ்வா (KSWA - Kayal Students Welfare Association - Hong Kong) அமைப்பு. அல்லாஹ்வின் பெருகொண்ட கருணையால், நம் அமைப்பு ஹாங்காங் நகரில்,1998 ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று வரை எளிய முறையில் அதன் சேவையை செய்து வருவது தாங்கள் யாவரும் அறிந்ததே! அல்ஹம்துலில்லாஹ்!
அமைப்பின் நோக்கம்:
பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தங்களின் உயர் கல்விக்கு போக முடியாமல், வறுமையில் வாடும் நம் ஊர் முஸ்லிம் ஏழை மாணவர்களை, அவர்களின் உயர் படிப்பு படிக்கும் காலம் முழுவதும், முழுமையாக தத்து எடுத்து (அனைத்து செலவுகளுக்கும் பொறுப்பெடுத்து) அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், ஒழுக்கமான வாழ்விற்கும் ஓர் அடித்தளமாக இருந்து, அந்த மாணவ செல்வங்களை அவர்களின் குடும்பத்திருக்கும், நம் ஊருக்கும் பயன்தரக்கூடியவர்களாக உருவாக்குல், கல்லாமையை இல்லாமையாக்குவது, ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி-யை சிரமமின்றி அடைய செய்வது போன்ற நல்ல எண்ணங்களை முற்ப்படுதுவதே நம் கஸ்வாவின் அடிப்படை நோக்கம்.
மர்ஹூம் கதீப் ஹாமித் நினைவு பரிசு:
எங்களின் அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான எங்களின் அன்பு நண்பர் மர்ஹூம் கதீப் ஹாமித் (அல்லாஹ், அவர்களின் மீது ரஹ்மத் வழங்கி, கபூரை பிரகாசமாக்கி வைப்பானாக) அவர்களின் நினைவாக கடந்த 9 வருடங்களாக (2002 ம் ஆண்டு முதல்) நம் ஊர் பள்ளிகூடத்தில் படித்து, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர்க்கு ரொக்க பணம் ரூ.5000 மற்றும் கேடையமும் வழங்கி வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!
கஸ்வாவின் மாணவர்கள்:
சற்றொப்ப 13 ஆண்டுகள், ஏறத்தாழ 21 மாணவர்கள் படித்து முடித்தும், 6 மாணவர்கள் படித்து கொண்டும் இருகின்றார்கள், அதில்
P.hd (1 மாணவர்),
M.Tech (1 மாணவர்),
M.E (1 மாணவர்),
B.D.S (1 மாணவர்),
B.Pharm (1 மாணவர்),
B.E (16 மாணவர்கள்)
நல்ல முறையில் படித்து முடித்தும்,
மேலும் 6 பேர்
B.Tech (1 மாணவர்),
MBBS (1 மாணவர்),
B.E (4 மாணவர்கள்)
படித்துக்கொண்டும் இருகின்றார்கள். வெற்றிகரமாக படித்து முடித்தவர்கள், உலகின் பல திசைகளிலும் உயர்ந்த பணியில் இருகின்றார்கள் என்பதை நாம் அறியும் போது, இந்த வாய்ப்பை நமக்கு அளித்த வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும் என்று நன்றியோடு புகழ்வதை தவிர வேறு வார்த்தைகள் நமக்கு இல்லை.
மேலும் நம் மாணவர்கள், தாங்கள் பெற்ற பெரும் உதவியை, தங்களை போன்ற மற்ற மாணவர்களும் எதிர் காலத்தில் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், நம் அமைப்பின் மூலம் தாங்கள் பெற்ற பொருள் உதவியை தங்களால் இயன்ற வரை நம் அமைப்பிற்கு நன்றி பெருக்கோடு திருப்பி செலுத்தி வருவதை நாம் மகிழ்ச்சியோடு இத்தருணத்தில் அறியத் தருகின்றோம்.
கஸ்வாவின் எதிர்கால திட்டம்:
இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில் நம் கஸ்வா அமைப்பு, அதன் சேவையை விரிவாக்கும் பொருட்டு, நம் ஊரின் முன்னேற்றத்தையும், நலனையும் முக்கிய குறிக்கோளாக கருதி, IAS, IPS, IFS போன்ற Civil Services courses களுக்கும், MD, DGO, DCH, Cancer, Heart Specialists, போன்ற உயர் மருத்துவ படிப்பிற்கும் அதிக முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
எனவே மேற்சொல்லப்பட்ட படிப்புகளுக்கு Merit basis யில் இடம் கிடைத்தும் படிக்க வசதி இல்லாத மாணவ மாணவியர்கள், எம் கஸ்வா அமைப்பை தொடர்ப்பு கொண்டால், அல்லாஹ்வின் கருணையால் நாங்கள் மனம் உவந்து முழு உதவி செய்ய விரும்புகின்றோம்!
முடிவுரை:
எங்களுக்கு இந்த அரிய சேவையை செய்ய சக்தி தந்த இறைவனுக்கு, நாங்கள் யாவரும் சிரம் தாழ்ந்தி நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களில் இதை விடவும் இன்னும் அதிகமாக உள்ளத்தூயமையோடு சேவை செய்ய வாய்ப்பு தருவானாக! ஆமீன்! நம் உயிரினும் மேலான நபி கண்மணி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ் நாளில் பயணம் செய்த புனித ஒட்டகத்தின் பெயரும் "கஸ்வா" என்று அறியும்போது ஏற்படும் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
எங்கள் அமைப்பை பற்றிய உங்கள் மேலான கருத்துகளையும், ஆலோசனைகளும் நாங்கள் எதிர்பார்கின்றோம். எல்லாம் வல்ல ரஹ்மான், உலகில் இருக்கின்ற நம் ஊரின் அனைத்து மன்றங்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும், நம் ஊர் முஸ்லிம்கள் மற்றும் யாவருக்கும் அவன் கிருபை செய்வானாக! ஆமீன்!
வஸ்ஸலாமு அலைக்கும்.
Correspondence Address in Hongkong
KSWA
T.S.T. P.O. BOX NO. 95361
Kowloon, Hong Kong.
Email :- info@kswa.org (or) kswa98@gmail.com
Contact our Kayal Reprersentatives
Janab M.I. Yousuf Hafiz - Cell # +91 96556 58153
Janab M.L. Haroon Rasheed - Cell # +91 98421 94621
இவ்வாறு கஸ்வா செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |