அண்ணாச்சிக்கு அன்பான வேண்டுகோள்: posted bySalai Sheikh Saleem (Dubai)[16 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5311
இப்போதைக்கு அண்ணாச்சி என்று காயலர்களால் தினமும் அழைக்கப்படுகின்ற தோழர் அனிதா ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு காயலரகள் சார்பில் ஒரு அன்பான வேண்டுகோள்:
எங்கள் (நமது) ஊர் கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறது உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயமே என்றலும், வறுமையின் வாட்டம் தாங்காது தன்மானத்திற்காக வெளியிலும் கையேந்தாது கஷ்ட்டத்தை தங்களுக்குள்ளேயே வைத்து குமுறிக்கொண்டிருக்கும் நல்லவர்களின் கூட்டமும் கூடிக்கொண்டே போவதை நீங்கள் உட்பட யாவரும் நன்கு அறிவர்.
இப்படிப்பட்ட நன்மக்களை பண உதவி செய்து மென்மேலும் வறுமையின் எல்லைக்கு கொண்டு செல்வதை விட, அவர்களின் கண்ணீர் துடைத்திட, அவர்களும் நம் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடந்திட அவர்களுக்கு ஒரு தொழில் அமைத்து கொடுத்தால் அதுவே பல தலைமுறைகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்கவே முடியாது.
இந்த வறுமை நிலை ஒழிந்திட நான் உங்களிடம் கேட்பது எல்லாம் எங்கள் நகருக்கு ஒரு தொழில் பேட்டை அமைத்து தருவதுதான்:
எத்தனையோ கைத்தொழில் தெரிந்த பெண்கள், ஆண்கள் எல்லோரும் திக்கு தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு தெரிந்த அல்லது புதிய தொழில் தொடங்குவதற்கு தேவையான இடம் தயாரிக்க சாதனங்கள் மூலப்பொருள்களையும் கொடுத்து தயாரிக்கப்படும் பொருட்களையும் அரசாங்கமே நல்ல விலைகள் கொடுத்து வாங்க வழி வகை செய்து கொடுக்க வேண்டும்.
உங்களை மட்டும் நம்பி ஒட்டுப்போட்ட எங்களுக்கு நீங்கள் கண்டிப்பாக இந்த தொழில் பேட்டை அமைத்து தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross