அரை குறை சீர் கல்வி! posted bykavimagan kader (dubai)[16 June 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5320
பள்ளிமாணவ,மாணவியரின் காலமும்,மக்களின் வரிப்பணமும் விரயம் ஆவதை எண்ணி உண்மையிலேயே கவலைகொள்ளும் இதயங்களுடன் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.அதே நேரத்தில், என்ன நிகழ்கிறது என்பதனை அறியாமலேயே, கருணாநிதி ஏதோ சாதித்துக் கிழித்து விட்டதைப்போலவும், அதனை ஜெயலலிதா தைக்க மறுப்பதைப் போலவும் அடுக்கு மொழியில் அளந்து விடுகின்ற நண்பர்கள், எனது இந்த கருத்துக்கு
விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கடந்த ஐந்தாண்டு காலமாக கருணாதி செயல்படுத்திய இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி, காப்பீட்டுத் திட்டம், வீடு கட்டும் திட்டம், என்று ஒவ்வொன்றின் பின்னணியிலும் அவரது குடும்ப நலன் மாத்திரம்தான் இருந்தது என்று, எல்லா ஊடகங்களாலும் தோலுரித்து தொங்கவிடப்பட்ட கதை, கழுதை வாலில் கட்டிய தகர டப்பாவின் ஓசையாக காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்!
சமச்சீர் கல்வி என்பது, சமூக ஆர்வலர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கை. தேர்தல் களத்தில் மக்களால் புறந்தள்ளப்படுவோம் என்பதனை நன்றாக உணர்ந்திருந்த கருணாநிதி, மக்களை திசைதிருப்ப தனது அரசின் அந்திம
காலத்தில் கொண்டுவந்த திட்டம்தான் சமச்சீர்கல்வி.
முத்துக்குமரன் கமிட்டி பரிந்துரைத்த 109 விஷயத்தில்,வெறும் நான்கினை மாத்திரம் ஏற்றுக்கொண்டு, மற்றதைக்குறித்து கிஞ்சிற்றும் அக்கறையின்றி அள்ளித் தெளித்த அவசரகோலத்தில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தினால் தரமான கல்வியைத்தர முடியாத காரணத்தால், அதனை சீரமைத்து அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தனது அரசின் கொள்கை என்று, ஜெயலலிதா சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் கூறியுள்ளார்.
இதன் பின்னணியில் இருக்கும் நியாயத்தை உணர்ந்துகொண்ட நீதிமன்றம், அதே நேரத்தில் புதிய புத்தகம் கொண்டுவருவதால் ஏற்படும் கால விரயத்தையும் மனதிற்கொண்டு, ஒன்று மற்றும் ஆறாம் நிலைகளில் மாத்திரம் தற்போதைக்கு இதனை செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஓட்டை உடைசல்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் போன்ற உறுப்பினர்கள் சபையில் விமர்சித்தபோது, முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு விக்கித்து, வாயடைத்துப் போய் இருந்ததை
பத்திரிகைச் செய்திகள் படம்பிடித்துக் காட்டின.
சமச்சீர் கல்வி என்பது ஒன்றும் கருணாநிதி வீட்டுச் சொத்தல்ல! அது எண்ணற்ற சிந்தனையாளர்களின் கனவு. அது சரியான தருணத்தில், சரியான முறையில், மெய்ப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross