தங்கத்தமிழகமாம்.. தங்கத்தமிழகம்..!!. posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[17 June 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5343
இந்த குழு என்ன பரிந்துரை செய்யப்போகிறதோ..புரியவில்லை. அம்மாவின் மனநிலையை தான் பிரதிபலிப்பார்கள்.
முதலில் நம்முடைய கல்விதரத்தை உயர்த்த முயற்சி பண்ணுங்க.ஐயாக்களா..
யாருடைய புண்ணியமோ, நம் மாநில மாணவர்களுக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் பேச தெரிகிறதா?.. மற்ற மாநில மாணவர்கள் குறைத்து மூன்று மொழிகள் சரளமாக பேசுகிறார்கள்.
தங்கத்தமிழகமாம்..தங்கத்தமிழகம்..!!.
மூன்று தலைமுறையை கெடுத்து வைத்து உள்ளார்கள்.
இதில் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸாம்.கொடுமை...சும்மாவே படிக்காமல் விளையாட்டு, விளையாட்டு தான்.
"என்னப்பா எக்ஸாம் வைத்துக்கொண்டு விளையாட்டா?" என்று கேட்டால்..
"போங்க காக்கா..கவலை படாதீங்க..நாங்க எல்லாம் ஆல் பாஸ்" என்று நமக்கே கமெண்ட்ஸ்.
இதில் இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் மதியம் இரண்டு அரை மணிக்கு எல்லாம் பள்ளிக்கூட வெளியில் ஐஸ் தின்னுக்கொண்டு இருக்கிறானுங்க.
என்னாங்கடா..பரீட்சைக்கு போகவில்லையா..இரண்டு மணிக்கே ஆரம்பித்து விட்டார்களே..இப்போ மணி 2 1/2 ஆகிவிட்டது என்று நாம் பதட்டப்பட்டால்..
அவர்களோ ஐஸ் திண்ட கூலில்...பரீட்சை எழுதி முடித்து விட்டோம்..அட்டென்ட் பண்ணினால் பாஸ் தான்,,என்று மீண்டும் நமக்கு ஜல்லி அடிக்கிறானுவோ.. இது தான் நம் கல்வி நிலை.
பத்தாம் வகுப்பு முடித்து வெளியில் வரும் போது கண்டிப்பாக ஆங்கிலம், ஹிந்தி,தமிழ் ஆகிய மூன்று மொழியில் சரளமாக எழுத, படிக்க வைக்கணும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross