இதயம் கசிந்த அனுதாபங்கள்! posted byரியாத்வாழ் காயல் நண்பர்கள் (ரியாத், சஊதி அரபிய்யா)[16 October 2010] IP: 59.*.*.* India | Comment Reference Number: 540
கடந்த 14.11.2010 அன்று நண்பகலில் ஹாஃபிழ் என்.ஹெச்.ஷாஹுல் ஹமீது ஹாஜி அவர்கள் வஃபாத்தானார்கள் என்ற செய்தி எங்களை மிகவும் மனவேதனையில் ஆழ்த்தியது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எங்களின் இனிய நண்பர் என்.ஹெச்.ஹாஃபிழ் நல்லொழுக்கமும், நற்குணமும் மிக்கவராய் திகழ்ந்தார்.
இறைமறை குர்ஆனை இதயத்தில் ஏந்திய இளவல்.
பி.எஸ்ஸி. பட்டதாரி
சிறந்த விளையாட்டு வீரர்.
மதரஸா ஹாமிதிய்யா மார்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களில் ஒருவர்.
மாணவ சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு மிகுந்த ஆர்வம் காட்டியவர்.
எல்லோரோடும் கனிவோடு பழகும் நற்பண்பாளர்...
என பன்முகத்தன்மையோடு ஆரவாரமின்றி வளர்ந்து வந்த நல்ல முன்மாதிரி இளைஞர்.
அவரைப் பிரிந்து தவிக்கும் குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களுடன் எங்களின் இதயம் கசிந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம்.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ”ஸப்ரன் ஜமீலா” என்ற அழகிய பொறுமையை நாம் மேற்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.
அதற்கான மன உறுதியை அவரின் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!
கருணைமிக்க ரஹ்மான் அன்பு நண்பனின் பிழைகள் யாவையும் மன்னித்து மண்ணறை வாழ்வை சிறப்பாக்கி, நாளை மறுமையிலும் ”ஜன்னத்துல் பிர்தவ்ஸ்” எனும் உயர்வான சுவனபதிறைய வழங்கிஇ ஷஃபாஅத்துல் குப்ரா எனும் நபிகள் கண்மணி ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்தான பரிந்துரையை நஸீபாக்கி இறை லிகா என்னும் அல்லாஹ்வின் உன்னதமான தரிசனத்தையும் வழங்கியருள் புரிவானாக! ஆமீன்!! என இதயம் நறைந்து பிரார்த்திக்கிறோம்.
குறிப்பு:மர்ஹூம் அவர்களுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்குப் பின்னர் ஃகாயிப் ஜனாஸா தொழுகை நண்பர்களால் நடத்தப்பட்டது.வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross