கடந்த 14.10.2010 அன்று காலமான காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை பின்வருமாறு:-
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!
அல்லாஹ் அனைத்திற்கும் போதுமானவன். ஸலவாத்தும், ஸலாமும் நம் உயிரினும் மேலான உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களைப் சார்ந்த நம் யாவர் மீதும் உண்டாவதாக, ஆமீன்.
நம் இதயமெல்லாம் நிறைந்த இனியவரும், நற்பண்பின் அடையாளமாகத் திகழ்ந்த நண்பரும், இறைமறையை இதயத்தில் ஏந்திய நம் இமாமும், என்றும் எல்லோரிடமும் புன்னகையுடன் பழகிய பண்பாளருமான கண்ணியமிகு ஹாஜி ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளைப்படி, 14.10.2010 அன்று நமதூரில் வைத்து வஃபாத்தான செய்தியறிந்து மனம் கலங்கினோம். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
உண்மையில் நம் சமுதாயம் நல்லதொரு பண்பாளரை, சமூக சேவகரை, இளைய தலைமுறையின் இமாம் ஒருவரை இழந்துவிட்டது. இறைநாட்டப்படி நடந்துவிட்ட இந்நிகழ்விற்காக நாம் ஸபூர் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
யாஅல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்து, அவர்களின் கப்ரை (மண்ணறையை) பிரகாசமாக்கி வைத்து, மறுவுலகில் மன்னர் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேலான ஷஃபாஅத்துடன் சுவனப் பூங்காவில் நுழையச் செய்வாயாக, ஆமீன் என இறைவனிடம் இருகரமேந்தி மனமுருக இறைஞ்சுகிறோம்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பெற்றோர், மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர்களின் இழப்பால் வாடும் அனைவருக்கும் எமது பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பேரிழப்பைத் தாங்கும் மனப்பக்குவத்தையும், பொறுமையையும் வல்ல ரஹ்மான் அவர்களுக்கு வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங். |