காயல்பட்டினத்தில், பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டும் இடங்களாக வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்களின் சுற்றுச்சுவர்களே பல்லாண்டுகளாக “பயன்பட்டு” வருகின்றன.
காயல்பட்டினம் சித்தன்தெருவில், பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவே திகழ்ந்துகொண்டிருந்த அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் சுற்றுச் சுவர் பகுதியை, சுமார் ஒரு மாதத்திற்கு முன், அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் காஜா முகைதீன் முழு முயற்சி மேற்கொண்டு, கம்பி வேலி அமைத்து, பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தடுத்து நிறுத்தினார்.
அதன்பிறகு, நகர்மன்றத்திலிருந்து அனுப்பப்படும் குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தைக் கவனித்து, பொதுமக்கள் குப்பைகளை அதில் போட்டனர். “எங்களுக்கு இருக்குற வேலையில நேரம் பார்த்து போயி வண்டியில எல்லாம் குப்பைய கொட்ட முடியாது” என்று கருதிய சிலர் மீண்டும் அந்த வேலியையொட்டிய வெளிப்பகுதியில் குப்பைகளைக் கொட்டத் துவங்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, இதுவரை துப்புரவாகக் காணப்பட்ட - தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வெளிச்சுவரும்,
அண்மையில் தரைமட்டமாக்கப்பட்டுள்ள எல்.கே.துவக்கப்பள்ளி வளாகமும் தற்சமயம் பொதுமக்களின் “பேராதரவால்” குப்பை கொட்டும் இடமாக மாறி வருவது “மகிழ்ச்சிக்குரிய” செய்தி (???)
|