உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில், சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் இன்று காலை 11.00 மணியளவில் ஆய்வு செய்தார்.
உலக காயல் நல மன்றங்களின் சுழற்சி முறை நிர்வாகத்தின் கீழ் இக்ராஃ கொண்டு வரப்பட்ட பின்னர் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வில், இக்ராஃவின் கல்வி உதவித்தொகை, தனித்தும், உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்தும் இக்ராஃ செய்துள்ள கல்விப் பணிகள், இக்ராஃவின் நிர்வாகச் செலவுகள், செயல்பாடுகள், உதவித்தொகை பெற்றவர்கள் பற்றிய முழு விபரம், பிற மன்றங்கள் சார்பில் இக்ராஃ மூலம் நிறைவேற்றப்படும் உதவிப் பணிகள், அவற்றுக்கான விசாரணை நடவடிக்கைகள் உட்பட பல அம்சங்கள் குறித்து ஜித்தா காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் ஆய்வு செய்தார்.
அவருக்குத் தேவையான விபரங்களை இக்ராஃ செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் சமர்ப்பித்தார். துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் உடனிருந்தார். |