காயல்பட்டினத்திலிருந்து நேற்று சுமார் 16 ஹாஜிகள் இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, காயல்பட்டினம், திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையங்களிலிருந்து சென்னைக்கு செந்தூர் விரைவுத் தொடர்வண்டியில் புறப்பட்டனர்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உள்ளிட்ட ஹஜ் பயணியரை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், ஓமன் காயல் நல மன்ற துணைத்தலைவர் டாக்டர் நூர்தீன், அமீரக காயல் நல மன்ற பிரதிநிதி ஹாஜி பாவா நவாஸ் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
|