சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், 17.10.2010 ஞாயிற்றக்கிழமையன்று மஞ்சள் காமாலை (Hepatitis B) தடுப்பூசி இரண்டாம் கட்ட இலவச முகாம் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 149 குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்ட இம்முகாமில், டாக்டர் ஜாஃபர் ஸாதிக் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். காயல்பட்டினம் மவ்லானா க்ளினிக் செவிலியர் உதவிப் பணிகளை மேற்கொண்டனர்.
காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி அஹ்மத் ஹுஸைன், செய்யித் முஹம்மத் புகாரீ, செய்யித் ஹஸன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
1. அல்ஹம்துலில்லாஹ் posted byN.S.E.MAHMOUD (Yanbu, Saudi Arabia)[18 October 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 558
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மஞ்சள் காமாலை இரண்டாம் கட்ட தடுப்பூசி 149 குழந்தைகள் போட்டு பயன் பெற்று இருப்பது சந்தோசம் அல்ஹம்துலில்லாஹ்.
சென்ற மாதம் (செப்டம்பர்) தடுப்பூசி முதல் கட்டமாக 300 பேர்கள் போட்டிருக்கின்றனர். ஆனால் நேற்று 149 பேர்கள் மட்டுமே இரண்டாவது கட்ட தடுப்பூசியை போட்டிருப்பது வருந்தத்தக்கது. எல்லா மக்களும் போட்டிருந்தால் நன்மையாக இருந்திருக்கும்.
மக்கள் அனைவர்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே இந்த மாதிரி ஏற்பாடுகளை நற்பணி மன்றங்கள் செய்கின்றன. வெறும் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு சும்மா இருக்கவில்லை அல்லது இது வசதியற்றவர்களுக்கு மட்டும்தான்,
வசதி உள்ளவர்களுக்கு அல்ல என்றும் கூறிடவில்லை. ஊர் மக்கள் அனைவர்களுமே விழிப்புணர்வு பெற்றிட வேண்டும்
என்ற நல்ல நோக்கோடு நற்பணி மன்றங்கள் இதை செய்கிறார்கள். எனவே இவைகளை முறையாக, உரிய நேரத்தில் பயன்படுத்திக்
கொள்வது நமது மக்களின் கடமையாகும்.
வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நல்ல ஆரோக்கியமான வாழ்வைத் தந்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross