இந்திய பிரதமரின் சிறுபான்மை மக்களுக்கான 15 அம்ச திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் ஒரு அம்சம் தொழிற்கல்வி (Technical and Professional Courses) பயிலும் மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவது.
சென்ற நிதி ஆண்டில் (2009-2010) இத்திட்டத்தின் கீழ் 35,982 மாணவர்களுக்கு ரூபாய் 97.51 கோடி ஊக்க தொகை வழங்கபட்டது. இதற்காக பட்ஜெட்டில் ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் (2010-2011) இத்திட்டத்தின் கீழ் - அக்டோபர் 15 வரை - 26,837 மாணவர்களுக்கு ரூபாய் 67.85 கோடி ஊக்க தொகை வழங்கபட்டுள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூபாய் 135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் இலக்காக 55,000 மாணவர்கள், ரூபாய் 135 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்திற்கான இவ்வாண்டு இலக்கு 767 மாணவர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு 366 மாணவர்கள், கிருஸ்துவர் 399 மாணவர்கள், சீக்கியர் 1 மாணவர் மற்றும் பௌத்தர் 1 மாணவர்.
இவ்வுதவி தொகை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் தாண்டியிருக்க கூடாது. மேலும் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
|