இந்தியாவிலிருந்து இவ்வருடம் இந்திய ஹஜ் குழு (HAJ COMMITTEE) மூலம் 1,25,000 பேர் ஹஜ் பயணம் செய்ய உள்ளனர்.
அக்டோபர் 21, நள்ளிரவு 12:01 நிலவரப்படி 167 விமானங்களில் 43,818 பயணியர் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியா சென்றடைந்துள்ளனர். மக்காவில் தற்போது 8,999 பேரும், மதினாவில் 34,819 பேரும் தங்கியுள்ளனர்.
மேலும் இந்தியாவிலிருந்து வருகைதந்த பயணிகளில் 10 பேர் இறந்து விட்டதாகவும், இதில் தனியார் நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண்ட ஒருவர் அடங்கும் என்றும் இந்திய தூதரகம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த காஜா முஹைத்தீன் உவைஸில் செய்யது அஹமது கனி (வயது 66) என்பவரும் அடங்குவார். |