காயல்பட்டினம் நெசவுத்தெருவிலுள்ள ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் அவர்களின் 361ஆம் ஆண்டு கந்தூரி வைபவ இறுதி நாள் நிகழ்ச்சி நேற்று (22.10.2010) மாலையில் நடைபெற்றது.
எம்.கே.ஷாஹுல் ஹமீத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் இப்றாஹீம் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அஸ்ர் தொழுகைக்குப் பின் நபிகளார் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஹான் அவர்களின் மனாகிப் ஷரீஃப் ஓதப்பட்டது.
மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ், காயல்பட்டினம் தாயிம்பள்ளி இமாம் அஹ்மத் காஸிம் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ நிகழ்த்தினார்.
ஜியாத் நன்றி கூற, பள்ளி இமாம் மவ்லவீ அபுல் ஹஸன் ஷாதுலீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
முன்னதாக, நேற்றுடன் 15 நாட்களாக அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. தினமும் காலை 08.00 மணி முதல் 09.00 மணி வரை மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. |