தமிழக அரசின் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எரிவாயு இணைப்பு பெறாமல் விடுபட்டுப் போன காயல்பட்டினம் 8ஆவது வார்டு பயனாளிகளுக்கு, இணைப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி புகாரீ நினைவு நூலக அரங்கில் வைத்து, நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக் தலைமையில், இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகிகளான கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், மக்கீ புகாரீ, செய்யித் முஹம்மத், எம்.இ.எல்.முஹ்யித்தீன், சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக், மரைக்கார், ஆஸாத் உள்ளிட்டோர் டோக்கன் வினியோகம் செய்தனர்.
காயல்பட்டினம் 8ஆம் வார்டைச் சார்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக வந்து டோக்கன் பெற்றுச் சென்றனர்.
|