காயல்பட்டினம் நகரில் வேகமாகப் பரவி வரும் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் பரவுவதன் காரணிகளை உயர்மட்ட மருத்துவ ஆய்வுக்குழு மூலம் கண்டறிவதற்காக, ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் 14.10.2010 வெள்ளிக்கிழமை இரவு 08.00 மணிக்கு, ரியாத் பத்தாவிலுள்ள ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் முஹ்ஸின் இல்லத்தில் நடைபெற்றது.
எஸ்.ஏ.டி.அபூபக்கர் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் கே.பி.செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 – மலர்க்குழுவினருக்கு நன்றி:
புனித ரமழானில் வெளியிடப்பட்ட “எழில் மலர் 2010” மலர் வெளியீட்டில் பணியாற்றிய குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 02 – மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவிகள் வேண்டி வந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, (ஈரல் புற்றுநோய், முதுகுத் தண்டுவட சிகிச்சை, இரத்தம் உறையாமை, இரத்த அனுச்சிதைவு, கர்ப்பப்பை கட்டி போன்ற சுகவீனத்தால் உடல் நலமற்றுள்ள) 5 ஏழைகளுக்கு ரூபாய் 60,000/- வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 03 – கல்வி உதவி:
தொழிற்கல்விக்காக நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த ஒரு ஏழை மாணவனுக்கு கல்வி நிதியுதவியாக ரூபாய் 15,000/- வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 04 – சிறுதொழில் உதவி:
ஏழைச்சகோதரி ஒருவருக்கு சிறுதொழில் செய்ய ரூபாய் 5,000/- மதிப்புள்ள ஓவன் (Oven) ஒன்று வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 05 – பங்களிப்பாளர்களுக்கு நன்றி:
இச்செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, மேற்கண்ட நிதியுதவிகளில் தங்களின் நன்கொடைகளையும் வழங்கிய உறுப்பினர்களுக்கு உளம்கனிந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 06 – உயிர்க்கொல்லி நோய் குறித்து ஆராய உயர்மட்ட மருத்துவக் குழு:
நமது காயல் நகரில் பெருகிவரும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான அடிப்படைக் காரணங்களை, உயர்மட்ட மருத்துவ ஆய்வுக்கழுவின் மூலம் கண்டறிவதற்காக செய்யப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த,
(1) ஜனாப் எஸ்.டி.ஷெய்குனா ஆலிம்
(2) ஜனாப் எம்.இ.எல்.செய்யிதஹ்மது நுஸ்கி
(3) ஜனாப் எஸ்.ஏ.டி.அபுபக்கர்
(4) ஜனாப் என்.டி.சதக்கத்துல்லாஹ்
(5) ஜனாப் எஸ்.எல்.சதக்கத்துல்லாஹ்
(6) ஜனாப் ஏ.எச்.முஹம்மது நூஹ்
(7) ஜனாப் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இனிய ஸலவாத்துடன் கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது தூய எண்ணங்களையும், செயல்களையும் ஏற்றருள் புரிவானாக! ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |