காயல்பட்டினத்தில் திருநங்கை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேக்அலி என்ற மின்னல் மீனா (34) திருநங்கை. இவர் தினமும் இரவு நேரம் பெண் வேடம் அணிந்து கொண்டு காயல்பட்டினம் பஜாரில் கடை கடையாக சென்று பணம் வசூல் செய்வது வழக்கமாம். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி கீழ நெய்னார் தெருவிலுள்ள காட்டுப் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
திருநங்கை ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காயல்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.,அப்பாசாமி ஆலோசனையின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காயல்பட்டினம் சீதக்காதி நகர் முகம்மது நூர்தீன் மகன் தாஜூதீன் (28), கோமான் நடுத்தெரு சாகுல்ஹமீது மகன் ஜாபர் சாதீக் (24), கொச்சியார் தெரு நாகூர்மீரான் மகன் ஹசன் என்ற முகம்மது ஹசன் (32) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று காயல்பட்டினம் புறவழிச்சாலையில் வைத்து கைது செய்தனர்.
தாஜூதீன் புரோட்டா கடை நடத்தி வருகிறார். ஜாபர்சாதிக், ஹசன் ஆகிய இருவரும் ஆட்டோ டிரைவராக உள்ளனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக பெரியநெசவு தெருவைச் சேர்ந்த காசி மகன் உமர் பாரூக் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
2. Intha Poonayum Paal Kudikkuma? posted byShaik Dawood (Hong Kong)[28 October 2010] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 697
I don't know the name of the guy in centre. He used to come for congregational prayers regularly to HAT Palli... if I'm not mistake... What is this???? Did this guy involve in this??? May Allah protect us.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross