வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், உள்ளூர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் காயல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், இம்மாதம் 16, 17 தேதிகளில் நடைபெற்றது. போட்டி நிகழ்வுகள் குறித்து, வி-யுனைட்டெட் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், உள்ளூர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் காயல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், இம்மாதம் 16, 17 தேதிகளில் நடைபெற்றது.
போட்டி துவக்கத்தை முன்னிட்டு, 16.10.2010 அன்று காயல் ஒலிம்பிக் ஜோதியுடன் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்திலிருந்து வீர்ர்கள் ஊர்வலம் கிளம்பியது. கே.எஸ்.ஸி. செயற்குழு உறுப்பினர்களான கே.ஜே.ஷாஹுல் ஹமீத், எச்.எம்.செய்யித் முஹ்யித்தீன், சாளை முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் ஒலிம்பிக் ஜோதி ஊர்வலத்தைத் துவக்கி வைத்தனர்.
அங்கிருந்து, காயல்பட்டினம் கீழநெய்னார் தெரு, தீவுத்தெரு வழியாக ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வந்தடைந்தது. அங்கு, முன்னணியின் மூத்த உறுப்பினர் நூஹ் ஸாஹிப், செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அடங்கிய குழுவினர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து சொளுக்கார் தெரு வழியாக ரெட் ஸ்டார் சங்கம் சென்றடைந்தது. அங்கு, ரெட் ஸ்டார் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களுமான ஆஸாத், தம்மாம் ப்ரஸ் பாபு, பாட்மிண்டன் விளையாட்டு வீரர் ஷேக் அலீ, கே.முஹ்ஸின் அடங்கிய குழு வரவேற்றது.
அங்கிருந்து புறப்பட்ட ஒலிம்பிக் ஜோதி ஊர்வலம், தாயிம்பள்ளி எதிரிலுள்ள சீதக்காதி நினைவு நூலக மைதானம் அருகில் நின்றது. அங்கு, ஹாஜி மூஸா, எல்.டி.சித்தீக் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து பிரதான வீதி வழியாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தை ஊர்வலம் வந்தடைந்தது. ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஒலிம்பிக் ஜோதியைப் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மாரத்தான் நீள்ஓட்டப் போட்டி புறப்பட்டது. ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா கொடியசைத்துத் துவக்கிய இப்போட்டியில், சுமார் 300 வீரர்கள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலிருந்து ஊர்வலமாகக் கிளம்பிய நீள் ஓட்ட - மாரத்தான் வீரர்கள், கே.டி.எம். தெரு - தாயிம்பள்ளிவாசல் எதிரிலுள்ள மஜ்லிஸுல் கவ்து சங்கம், அப்பாபள்ளித் தெரு ரெட் ஸ்டார் சங்கம், ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கம் வழியாக காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தை சென்றடைந்தனர்..
மறுநாள் 17.10.2010 அன்று விளையாட்டுப் போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சப்ஜூனியர் பிரிவிலும்,
ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும்,
பதினொன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்கள் சீனியர் பிரிவிலும்,
கல்லூரியில் பயிலும் வயதைத் தாண்டிய வீரர்கள் சூப்பர் சீனியர் பிரிவிலும் இடம்பெற்று, போட்டிகளில் கலந்துகொண்டனர்.
18.10.2010 அன்று இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து இரவு 07.00 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் தலைமை தாங்கினார். கிராஅத்தைத் தொடர்ந்து, அப்துல் காதிர் நெய்னா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல் ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட பல்வேறு நகர் நல்லிணக்கப் போட்டிகளை நடத்தி வரும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் குறித்து பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர் அறிமுகவுரையாற்றினார்.
இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் ஆசிரியை பத்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பிடம் பெற்ற வீரர்களுக்கு நகரப் பிரமுகர்கள் பரிசுகளை வழங்கினர்.
செய்யித் ஹஸன் நன்றியுரையுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
போட்டிகளில் பரிசுகள் பெற்றோர் பட்டியல் பின்வருமாறு:-
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை:
நீளம் தாண்டுதல் போட்டி :
முதல் பரிசு : S.I. முஹம்மது அப்துல்லாஹ்
இரண்டாம் பரிசு : K.M. முஹம்மது நியாஸ்
மூன்றாம் பரிசு : முஹம்மது ஹக்கீம்
200 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : A.M. ஃபாரூக்
இரண்டாம் பரிசு : M.I. அப்துல்லாஹ்
மூன்றாம் பரிசு : M.M. முஹம்மது அக்கீல்
400 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : J.M. அஹமது நியாஸ்
இரண்டாம் பரிசு : M. ஜாஃபர் சாதிக்
மூன்றாம் பரிசு : M.I. அப்துல்லாஹ்
உயரம் தாண்டுதல் போட்டி:
முதல் பரிசு : M.A.K. அப்துல் ரஹ்மான்
இரண்டாம் பரிசு : A.H. உமர் ஃபாரூக்
மூன்றாம் பரிசு : M.I. அப்துல்லாஹ்
100 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : A.H. உமர் ஃபாரூக்
இரண்டாம் பரிசு : K. சுலைமான் ஃபயாஸ்
மூன்றாம் பரிசு : ஜாஃபர் சாதிக்
9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை
நீளம் தாண்டுதல் போட்டி:
முதல் பரிசு : M.A. முஹம்மது சாலிஹ் வாசிஃப்
இரண்டாம் பரிசு : A.H. முஹம்மது ஜமீல்
மூன்றாம் பரிசு : M.S. முஹம்மது சாலிஹ்
200 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : M.S. முஹம்மது சாலிஹ்
இரண்டாம் பரிசு : S.I.மூஸா நெய்னா
மூன்றாம் பரிசு : M.B. சேக்
400 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : M.S. முஹம்மது சாலிஹ்
இரண்டாம் பரிசு : A.H. முஹம்மது ஜமீல்
மூன்றாம் பரிசு : A.L. சேகு நூர்தீன்
குண்டு எறிதல் போட்டி:
முதல் பரிசு : M.N. ஈஜாஸ்
இரண்டாம் பரிசு : A.S. முஹம்மது இபுறாஹீம் முபீன்
மூன்றாம் பரிசு : A.H. முஹம்மது ஜமீல்
உயரம் தாண்டுதல் போட்டி:
முதல் பரிசு : S.A. செய்யத் ஐதுருஸ் புஹாரி
இரண்டாம் பரிசு : N.G. முஹம்மது ஆதம்
மூன்றாம் பரிசு : A.L. சேகு நூர்தீன்
100 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : A.H. முஹம்மது ஜமீல்
இரண்டாம் பரிசு : S.A. செய்யத் ஐதுருஸ் புஹாரி
மூன்றாம் பரிசு : S.I. மூஸா நெய்னா
சீனியர்
நீளம் தாண்டுதல் போட்டி:
முதல் பரிசு : கசாலி மரைக்கார்
இரண்டாம் பரிசு : M.A.K. அபுதாஹிர்
மூன்றாம் பரிசு : S.A. முஹம்மது இர்ஃபான்
800 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : W.S.M.B. முஹம்மது சுலைமான்
இரண்டாம் பரிசு : M.A.K. முஹைதீன் முபாரக்
மூன்றாம் பரிசு : S. அப்துல் ஃபாஸில்
குண்டு எறிதல் போட்டி:
முதல் பரிசு : ஜமீர்
இரண்டாம் பரிசு : ஃபஹிம்
மூன்றாம் பரிசு : அபு சுஃப்யான்
தட்டு எறிதல் போட்டி:
முதல் பரிசு : ஃபஹிம்
இரண்டாம் பரிசு : அபு சுஃப்யான்
மூன்றாம் பரிசு : முபாரக்
ஈட்டி எறிதல் போட்டி:
முதல் பரிசு : T.S.அஹமது ஜிஃப்ரி
இரண்டாம் பரிசு : M.நதீம்
மூன்றாம் பரிசு : முஹம்மது இஸ்மாயில்
200 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : A. கைசாலி மரைக்கார்
இரண்டாம் பரிசு : H.M. முஹம்மது முஹைதீன்
மூன்றாம் பரிசு : S.A. முஹம்மது இர்ஃபான்
400 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : W.S.M.B. முஹம்மது சுலைமான்
இரண்டாம் பரிசு : M.S. சேக் முபாரக்
மூன்றாம் பரிசு : A.M. செய்யது இப்றாஹீம்
உயரம் தாண்டுதல் போட்டி:
முதல் பரிசு : S.A. முஹம்மது இர்ஃபான்
இரண்டாம் பரிசு : F. முஹம்மது ஜமீர்
மூன்றாம் பரிசு : H.M. முஹம்மது முஹைதீன்
100 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : கைசாலி மரைக்கார்
இரண்டாம் பரிசு : H.M. முஹம்மது முஹைதீன்
மூன்றாம் பரிசு : H. அஷாருதீன்
சூப்பர் சீனியர்
நீளம் தாண்டுதல் போட்டி:
முதல் பரிசு : M.F. பசீர் அஹமது
இரண்டாம் பரிசு : M.S. அஹமது ஃபைசல்
மூன்றாம் பரிசு : முஹம்மது சதக்கதுல்லா (சேனா)
200 மீட்டா ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : M.F. பசீர் அஹமது
இரண்டாம் பரிசு : B.A. இஸ்மாயில்
மூன்றாம் பரிசு : M.T. முஹம்மது ஹனீஃபா
400 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : S.M. சதக்கதுல்லாஹ்
இரண்டாம் பரிசு : B.A. இஸ்மாயில்
மூன்றாம் பரிசு : ராஜிக் ஹீசைன்
800 மீட்டா ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : ஹனீஃபா
இரண்டாம் பரிசு : ஆரிஃப்
மூன்றாம் பரிசு : ராஜிக் ஹீசைன்
உயரம் தாண்டுதல் போட்டி:
முதல் பரிசு : முஹம்மத்
இரண்டாம் பரிசு : சித்தீக்
மூன்றாம் பரிசு : நவ்ஃபல்
தட்டு எறிதல் போட்டி:
முதல் பரிசு : A.R. ஜாபிர்
இரண்டாம் பரிசு : வாவு. மொகுதூம்
மூன்றாம் பரிசு : S.B. சுலைமான்
குண்டு எறிதல் போட்டி:
முதல் பரிசு : A.R.ஜாபீர்
இரண்டாம் பரிசு : M.F. பசீர்
மூன்றாம் பரிசு : M.S.ஃபைஸல்
ஈட்டி எறிதல் போட்டி:
முதல் பரிசு : அலி ஃபைஸல்
இரண்டாம் பரிசு : யுசுஃப்
மூன்றாம் பரிசு : இம்ரான்
100 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : M.F. பசீர்
இரண்டாம் பரிசு : M.H. சேக்கனா லெப்பை
மூன்றாம் பரிசு : அலி ஃபைஸல்
யானைக்கு கண் வைக்கும் போட்டி:
முதல் பரிசு : ஜனாப். தீபி
இரண்டாம் பரிசு : ஜனாப். L.T.S. சித்தீக்
மூன்றாம் பரிசு : ஜனாப். அப்துல் ரஷீத்
மியூசிக்கல் சேர் போட்டி:
முதல் பரிசு : ஜனாப். அப்துல் ரஷீத்
இரண்டாம் பரிசு : ஜனாப். L.T.S. சித்தீக்
மூன்றாம் பரிசு : ஜனாப். நூகு
லக்கி கார்னர் போட்டி:
முதல் பரிசு : ஜனாப்.அப்பாஸ்
இரண்டாம் பரிசு : ஜனாப். அபுபக்கர்
மூன்றாம் பரிசு : ஜனாப்.R. மஹ்ரூஃப்
துளிர் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கான 50 மீட்டர் ஓட்டப் போட்டி:
முதல் பரிசு : அமர்நாத்
இரண்டாம் பரிசு : ராம்விக்னேஷ்
மூண்றாம் பரிசு : ஈஸ்வரமூர்த்தி
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கலாமீ யாஸர் அரஃபாத்,
கலாமீஸ் ஆயத்த ஆடையகம்,
எல்.எஃப். ரோடு, காயல்பட்டினம்.
படங்கள்:
செய்யித் அஹ்மத் புகாரீ,
காயல்பட்டினம். |