காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கடந்த 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் தொழ வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, பள்ளிவாசலை விரிவாக்கம் செய்ய பள்ளி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு, அதன் துவக்கமாக, கடந்த 28.10.2010 அன்று பள்ளியின் தென்மேல் புறத்தில் அமைந்துள்ள கோட்டைச்சுவர் உடைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் பணி, நேற்று (29.10.2010) ஜும்ஆ தொழுகைக்குப் பின் நடைபெற்றது. அதன் துவக்கமாக, அப்பள்ளியின் நிர்வாகிகள் சிமெண்ட் கலவையை ஒவ்வொருவராக தோண்டப்பட்ட அஸ்திவாரக் குழியில் இட்டனர்.
br>
பள்ளியின் துவக்க காலத்தில் பேருரையாளராக (கத்தீபாக) இருந்த - மறைந்த முஃப்தீ மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் என்ற செய்யித் ஆலிம் அவர்களின் மகன்களான - அஸ்ஹர் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் எஸ்.இ.மரைக்காயர் ஆலிம், முன்னாள் முத்தவல்லி எஸ்.இ.முஹம்மத் அலீ ஆகியோரும், பள்ளியின் துணைத் தலைவர்களான ஹாஜி, எஸ்.ஓ.அபுல்ஹசன் கலாமீ, டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், பொருளாளர் ஹாஜி இப்ராஹீம் மக்கீ, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் மஹ்ழரீ, இமாம் மற்றும் முஅத்தின் ஆகியோர் சிமெண்ட் கலவையை அடுத்தடுத்து அஸ்திவாரக் குழுயிலிட்டனர்.
திரளான பொதுமக்களின் தக்பீர் முழக்கத்துடன் இப்பணி நடைபெற்றது.
தகவல்:
ஹாஃபிழ் எம்.என்.புகாரீ,
தைக்கா தெரு, காயல்பட்டினம்.
புகைப்படம்:
ஒய்.எம். முஹம்மது தம்பி (ஏ.கே.எம். ஜுவல்லர்ஸ்) மூலமாக
முஹம்மது உமர்
|