காயல்பட்டினத்தில் திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞர், கோவில்பட்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பீர்முகம்மது மகனான சேக் அலி என்ற மின்னல் மீனா (35). இவர், காயல்பட்டினத்தில் இரவு நேரங்களில் பெண் போன்று வேடமணிந்து, கடைகளில் வசூல் செய்வது மற்றும் இளைஞர்களோடு சுற்றுவது வழக்கமாம்.
இவர் கடந்த மாதம் 16ஆம் தேதி காயல்பட்டினம் கீழநைனா தெருவில் காட்டுப் பகுதியில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த காசி மகன் சீனிவாசன் என்ற உமர்பாரூக்கை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 2இல் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பர்சாத்பேகம் உத்தரவிட்டார்.
நன்றி:
தினமணி.காம் |