உஹது போரின்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பல் இழப்பிற்குள்ளாக்கப்பட்ட நேரத்தில், உஹது மலைக்குகையில் தங்கி ஓய்வெடுத்தார்கள். பின்னர் அதற்கு மிக அருகிலுள்ள மற்றொரு பாதுகாப்பான குகைக்கு மாறினார்கள்.
இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள காயல் ஹாஜிகள் தரிசித்தனர். காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் பாக்கவீ தங்ஙள் உள்ளிட்ட காயலர்கள் பார்வையிட்ட காட்சி:-
தகவல்:
(காயல்பட்டினம்) K.J.ஷாஹுல் ஹமீத் மூலமாக,
S.A.K.முஹம்மத் அலீ,
மதீனா முனவ்வரா, சஊதி அரபிய்யா. |