கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றத்தின் சார்பில், 31.10.2010 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில், அமைப்பிற்கு புதிதாக செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 3ஆவது பொதுக்குழுக் கூட்டம், 31.10.2010 அன்று மாலை 04.15 மணிக்கு, சகோதரர் நெய்னா இல்லத்தில் நடைபெற்றது. மன்ற துணைத்தலைவர் கே.எம்.முஹம்மத் ரஃபீக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் சகோதர்ர் சாமு இறைமறை வசனங்களுடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அனைவரையும் வரவேற்புரையாற்றினார். அமைப்பின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் துணைத்தலைவரும், இக்கூட்டத்தின் தலைவருமான கே.எம்.ரஃபீக் தலைமையுரையாற்றினார். அமைப்பை அரசுப்பதிவு செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், அதில் ஏற்படும் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கினார்.
பின்னர், மன்றப் பொருளாளர் உதுமான் அப்துர்ராஸிக் மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை - மன்றத்தின் கணக்குத் தணிக்கையாளரும், மன்ற உறுப்பினருமான நூருல் அமீன் ஒப்புதலுடன் தாக்கல் செய்தார். கூட்டம் அதனை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்:
மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற செய்தித் தொடர்பாளர்களாக,
(1) எஸ்.இ.செய்யித் ஐதுரூஸ் (சீனா) - செயற்குழு உறுப்பினர்,
(2) கே.எம்.முஹம்மத் ரஃபீக் (KRS) - துணைத்தலைவர்
ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்.
தீர்மானம் 2 - புதிய செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்:
புதிதாக 10 பேரை செயற்குழு உறுப்பினர்களாக்க வேண்டும் என, மன்ற பொதுக்குழுவால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் சார்பில் இக்கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பொதுக்குழு அதனை அங்கீகரித்ததைத் தொடர்ந்து, 10 உறுப்பினர்கள் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களாக புதிதாக நியமனம் செய்யப்பட்டனர்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்றத்தின் கவுரவ ஆலோசகர் சகோதர்ர் கிதுரு முஹம்மத் அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து, துஆவுடன் மாலை 06.10 மணிக்கு இறையருளால் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீரும், காயல் மிச்சரும் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா)
மற்றும்
K.M.முஹம்மத் ரஃபீக் (KRS),
செய்தித் தொடர்பாளர்கள்,
மலபார் காயல் நல மன்றம்,
கோழிக்கோடு, கேரள மாநிலம்.
படங்களை தொகுப்பாக பார்வையிட இங்கே சொடுக்குக! |