ஈகைத் திருநாளை முன்னிட்டு கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் சார்பில் 2007ம் வருடம் முதல் இலவச பள்ளிச் சீருடை, ஜாதி, மத பேதமின்றி காயல்பட்டணம் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருவது அறிந்ததே. அந்த வகையில் இன்று அனதலை டீ.என்.டீ.டி.ஏ.பள்ளிக்கு கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளையின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான திரு.எம்.என்.எல்.சுலைமான் அவர்கள் தலைமையில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டது.
இந்தவிழாவில் கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் மக்கள் செய்தி தொடர்பாளர் ஜனாப் மன்னர் பாதுல் அஷ்ஹப், அறக்கட்டளை மேலாளர் ஜனாப் ஆசிக் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், தாளார் வக்கீல் டென்சிங் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் திரளாக பங்கேற்றனர்.
|