தமிழக அரசின் பொதுத் தேர்தல்கள் துறை செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-
1 . 1 .1 . 2011 - ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தம் 25 .10 .2010 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.
2 . வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றுதல் செய்ய விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசம் 25 .10 .2010 முதல் 9 .11 .2010 வரை என்று இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்தது. விண்ணபங்களை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் 30 .10 .2010 அன்றும் 7 .11 .2010 அன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
3 . நவம்பர் 5 - ஆம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகை காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியினை நீட்டிக்க வேண்டும் என்றும் 7 .10 .2010 அன்று விண்ணபங்களை பெறுவதற்காக நடத்தப்படவிருக்கும் சிறப்பு முகாமினை மற்றொரு வாரக்கடைசி நாளில் நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் வரப்பெற்றன. தற்போது இந்திய தேர்தல் ஆணையம், பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றுதல் செய்ய விண்ணப்பங்களை அளிப்பதற்கான கால அவகாசத்தை 13 .11 .2010 வரை நீட்டித்து ஆணையிட்டுள்ளது. 7 .11 .2010 அன்று நடைபெறுவதாக இருந்த சிறப்பு முகாம் 13 .11 .2010 அன்று நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல்கள் முன்னர் நிர்ணயித்தப்படி 5 .1 .2011 அன்று வெளியிடப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross