உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் 12 பேர் புதிதாக உறுப்பினராவதென, ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் (JAKWA) அமைப்பின் சாதாரன கூட்டம் 31.10.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஹாஜி எம்.எம்.ஜஹாங்கீர் இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஜி கே.எஸ்.முஹம்மது நூஹ் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.எச்.ஜாஃபர் சாதிக். ஹாஜி எஸ்.எல்.ஹீஸைர் மௌலானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வரவேற்புரை நிகழ்த்திய மன்றச் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், இதுவரை சந்தா செலுத்தாதவர்கள் விரைந்து செலுத்துமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
இக்ராஃவிற்கு புதிய உறுப்பினர்கள்:
மேலும் அவர் தனதுரையில், இக்ராஃவின் சேவையில் நமது அமைப்பும் பங்கெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் 12 நபர்கள் இக்ராஃவில் உறுப்பினராவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
நிதிநிலை அறிக்கை:
பின்னர் உரையாற்றிய மன்ற ஒருங்கிணைப்பாளர், கடந்த மூன்று மாத மன்றச் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அதை கூட்டம் ஒருமனதாக அங்கீகரித்தது.
ஜகாத் தொகை வினியோகம்:
தொடர்ந்து உரையாற்றிய ஓருங்கிணைப்பாளர், மன்றத்தால் இதுவரையில் வசூலிக்கப்பட்டுள்ள ஜகாத் நிதியை தேவையுடையோருக்கு விரைவில் வழங்கிட உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டார். வருகை தந்திருந்த உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பின், ஜகாத் நிதியை வழங்குவதற்கு,
ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூ தாஹிர்,
மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ,
ஹாஜி எம்.ஏ.முஹ்யித்தீன் தம்பி
ஆகிய மூவர் குழு நியமனம் செய்யப்பட்டது.
துளிருக்கு உதவி:
தொடர்ந்து உரையாற்றிய மன்றத் துணைத்தலைவர் யு.ர்.மஹ்மூத் ஹஸன், நமதூர் துளிர் பள்ளியின் சேவையையும், அதற்கு உதவி புரிய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதனடிப்படையில் துளிர் பள்ளிக்கு எமது அமைப்பின் மூலம் உதவி செய்வதென முடிவுசெய்யப்ட்டது.
மன்றத்தின் அடுத்த கூட்டம் ஜனவரி மாதத்தில் கூட்டப்படும் என மன்றச் செயலாளர் தெரிவித்தார்.
மவ்லவீ ஹாஃபிழ் அபுல் ஹஸன் மஷீஷ் காஷிஃபீயின் துஆ மற்றும் ஸலாவத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
கூட்டம் நடந்த தேதியன்று ஜெய்ப்பூரிலிருந்த மன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
Y.H.M.ஷாஹுல் ஹமீத்,
பொருளாளர்,
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா),
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம். |