வங்காள விரிகுடா கடலில் உருவாகி உள்ள ஜல் புயல் சின்னம் நேற்று மாலை நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுப்பெற்று - மேற்கு - வடமேற்கு திசையில் நகர்கிறது. ஞாயிறு (நவம்பர் 7 அன்று) இரவு புதுச்சேரிக்கும் தென் ஆந்திராக்கும் நடுவே, சென்னைக்கு அருகே, கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 - 30 KNOTS வேகத்தில் (அதாவது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர்) வடக்கு திசை நோக்கி பலத்த காற்று அடிக்கலாம் என சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
பரவலாக தமிழக கடலோர பகுதிகளில் பலத்த மலை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. கடல் மிக கொந்தளிப்பாக இருக்கும் . ஆகவே சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களில் எச்சரிக்கை சின்னம் 3 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்:
www.kayalsky.com
|