DCW நிறுவனத்தின் செப்டம்பர் 30 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 283 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 11 கோடியே 47 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் வரவை விட (272 கோடி ரூபாய்) 4 சதவீதம் கூடி இருந்தாலும், அதே காலகட்டத்தின் லாபத்தை (23 கோடி ரூபாய்) விட 47 சதவீதம் இது குறைவு.
மேலும் இக்காலாண்டில் DCW 3.75 கோடி ரூபாய் வரி கட்டியுள்ளது.
இக்காலகட்டத்தில் முக்கிய முன்னேற்றங்களாக இந்நிறுவனம் கீழ்காணும் விசயங்களை தெரிவித்துள்ளது :-
(1) இத்தாலி நிறுவனம் ROCKWOOD ITALIA உடன் ஆண்டுக்கு 31,000MT ௦௦அளவில் SYNTHETIC IRON OXIDE உற்பத்தி செய்வதற்காக
சாஹுபுரத்தில் தொழிற்சாலை நிறுவ உடன்பாடு
(2) DCW வளாகத்தில் உள்ள 50MW மின்சார உற்பத்தி வசதியை முழுமையாக பயன்படுத்த 8.27 MW Injection Turbine நிறுவப்பட்டுள்ளது
(3) TRICHLOROETHYLENE உற்பத்தியை 4500 டன்னில் இருந்து 9000 டன்னாக உயர்த்த வேலைகள் துவக்கம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross