சஊதி அரபிய்யா - ரியாத் நகரில் தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கான மாதாந்திர மார்க்க நிகழ்ச்சி வரும் இம்மாதம் 05ஆம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சி குறித்து, ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பின் ரியாத்வாழ் தமிழ் முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வழமைபோல, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 05.11.2010 (28.11.1431) வெள்ளிக்கிழமையன்று, ரியாத் சுலையிலுள்ள Old Isthiraha “Layali Al Umr” அரங்கில், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கான மாதாந்திர இஸ்லாமிய ஒருநாள் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
அன்று காலை 11.30 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கி, இஷா வரை நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:-
வெள்ளிக்கிழமை ஜும்ஆ பேருரை...
இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு...
கேள்வி-பதில் அமர்வு...
குழந்தைகளுக்கான அறிவுரை அமர்வு...
அனைவருக்குமான விளையாட்டு...
தர்பிய்யா “பயிற்சியமர்வு”
பெண்களுக்கான தனி நிகழ்ச்சிகள்...
மேற்கண்ட நிரல் படி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கடந்த ரமழான் மாதத்தில் நடத்தப்பட்ட திருமறை குர்ஆன் 27ஆம் பகுதி மற்றும் “தவ்ஹீத்” என்ற தலைப்பிலான நூலிலிருந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றோருக்கு மகிழ்வூட்டும் சிறப்புப் பரிசுகள் இந்நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டவுள்ளன.
நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமது குடும்பத்தினருடன் கலந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
இந்நிகழ்ச்சிக்கு ரியாத் Air Base Dawah Centre அனுசரணை வழங்கியுள்ளது. மேலதிக விபரங்கள் பெற மவ்லவீ மஃப்ஹூம் அவர்களை 0504150373, 0567148958 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சோனா அபூ அஹ்மத்,
ரியாத், சஊதி அரபிய்யா. |