சென்ற மாதம் பூமியிலிருந்து தென்பட்ட ஹார்ட்லி 2 (Hartley 2) வால் நட்சத்திரம் பலரால் தொலைநோக்கிகள் உதவிகொண்டும், சில இடங்களில் வெறுங்கண்ணாலும் பார்க்கப்பட்டது.
இன்று - இந்திய நேரப்படி மாலை 7:20க்கு - நாசாவின் டீப் இம்பக்ட் (Deep Impact) விண்களம் - ஹார்ட்லி 2 (Hartley 2) வால்நட்சத்திரத்தை 700 கிலோ மீட்டர் அருகாமை வரை சென்று படம் எடுத்து அனுப்பியுள்ளது.
இதே டீப் இம்பக்ட் (Deep Impact) விண்களம் 2005ஆம் ஆண்டு டெம்பெல் 1 (Tempel 1) வால்நட்சத்திரத்தை மிக அருகில் சென்று ஆராய்ந்து
பல அறிய தகவல்களை வெளி கொண்டு வந்தது. இதுவரை நான்கு வால் நட்சத்திரங்களை விண்களங்கள் மிக அருகாமையில் இருந்து ஆராய்ந்துள்ளன. ஹார்ட்லி 2 (Hartley 2) அருகில் இருந்து ஆராயப்படும் ஐந்தாவது வால்நட்சத்திரம் ஆகும்.
டீப் இம்பக்ட் (Deep Impact) உடைய தற்போதைய செயல்பாடுகளுக்கு இபாக்சீ (EPOXI) என பெயர் இடப்பட்டுள்ளது. EPOXI என்பது இரு செயல்பாடுகள் ஒன்றுபடுத்தபட்டதை குறிப்பதாக உள்ளது. Extrasolar Planet Observations and Characterization (EPOCh) மற்றும் Deep Impact Extended Investigation (DIXI) என்பதே EPOXI என ஆனது.
தகவல்:
www.kayalsky.com
|