தமிழக மேல் சபைக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 78 உறுப்பினர்கள் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட உள்ளன.
1986 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தமிழக மேல்சபை கலைக்கபட்டது. இந்திய பாராளுமன்றத்தில் இவ்வருடம் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் தமிழகத்தில் மீண்டும் மேல்சபை உருவாக்கபடுகிறது. உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டு ஆகும்.
78 உறுப்பினர்களில் 12 பேர் தமிழக ஆளுனரால் நியமிக்கப்பட உள்ளார்கள். 26 பேரை சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். 26 பேரை உள்ளாட்சி மன்றங்களின் (மாநகராட்சிகள், முனிசிபாலிடிகள் போன்றவை) உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.
7 உறுப்பினர்களை குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவமிக்க பள்ளிக்கூட மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் தேர்வு செய்வார்கள்.
மீதி 7 உறுப்பினர்களை பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகள் தேர்வு செய்வார்கள்.
உள்ளாட்சி, பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகள் மாவட்டவாரியாக ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளட்சிகளுக்கான இடம் தூத்துக்குடிக்கு தனி தொகுதியாகும்.
பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளில் தூத்துக்குடி பிற மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாடு தென் தொகுதி என பெயர் இடப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அப்சல் உலமா பட்டம் உட்பட பல இஸ்லாமிய பட்டங்களும் தகுதிக்கு உரியவைகளாக அறிவிக்கபட்டுள்ளன. அவைகள் -
--- Adib-I-Fazil, Afzal-ul-Ulama, Munshi-I-Fazil and Tabib-I-Kamil (Shri Venkateswara University, Tirupati)
--- Fazil diploma of Madarasa Examination Board, Bihar
--- Alim and Kamil diplomas awarded by the Registrar of Arabic and Persian Examinations, Uttar Pradesh
--- Kamil, Fazil and Dabir Kamil diplomas of Allahabad University
--- Kamil, Fazil and Dabir Kamil diplomas of Lucknow University
--- Degrees or diplomas awarded by the Board of Madarasa Education, West Bengal
--- Fazil-Adab(Arabic), Fazil-i-Tafsir(Arabic) and Dabir-i-Kamil(Arabic) of the Lucknow University
--- Granted by the University of Madras
=== (a) Afzal-ul-Ulema
=== (b) Munshi-i-Fazil
=== (c) Adibi-i-Fazil
=== (d) Tabib-i-Kamil
=== (e) Afzal-ul-Atibba
Afzal-ul-Ulema title in Arabic awarded by the University of Travancore/Kerala
இத்தகுதியை பெற்றவர்கள் உரிய ஆவணங்களை இணைத்து - தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பித்து - வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைத்து கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி நவம்பர் 6.
தகவல்:
சுல்தான் சலாஹுத்தீன் மழாஹிரி,
பேராசிரியர், ஜாவியா அரபுக்கல்லூரி, காயல்பட்டினம்.
மற்றும்
சோனா முஹம்மது அப்துல் காதர், ரியாத் - சவுதி அரபியா
|