காயல்பட்டண கடற்கரை பயனீடு குறித்த மக்கள் கருத்து சேகரிப்பு கடந்த இரு வாரங்களாக நடந்து வந்தது அனைவரும் அறிந்ததே.
காயல்பட்டணத்தில் ஜும்மா பள்ளிகள் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து , காகித படிவங்கள் விநியோகிக்கப்பட்டு , அக்டோபர் 31 வரை - நகரின் பிரதான கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டன. அப்படிவங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
காயல்பட்டணம்.காம் இணையதளம் மூலமாகவும் - வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் காயலர்களின் கருத்துக்களும் சேகரிக்கபட்டன. இணையதளம் மூலம் மொத்தம் 539 படிவங்கள், இந்திய உட்பட 19 நாடுகளில் இருந்து பெறப்பட்டன. அதில் 18 படிவங்கள் பெயர் தெளிவில்லா காரணத்திற்காகவும், ஒருமுறைக்கு மேல் ஒருவரே படிவத்தை சமர்ப்பித்த காரணத்திற்காகவும் ஏற்றுகொள்ளப்படவில்லை.
ஏற்று கொள்ளப்பட்ட 521 படிவங்களின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன. நகரில் காகித படிவங்கள் மூலம் பெறப்படும் கருத்துக்களின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
காயல்பட்டண கடற்கரை பயனீடு குறித்த இணையதளம் மூலம் பெறப்பட்ட கருத்துக்களின் முடிவுகள்:-
1. காயல்பட்டினம் கடற்கரையின் தற்போதைய நிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?
(a) ஆம் - 23.99% [125 வாக்குகள்]
(b) இல்லை - 76.01% [396 வாக்குகள்]
2. காயல்பட்டினம் கடற்கரையை சுற்றுலா தலமாக்கலாமா?
(a) ஆம் - 23.80% [124 வாக்குகள்]
(b) இல்லை - 76.20% [397 வாக்குகள்]
3. காயல்பட்டினம் கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக கூடுதல் வசதிகள் செய்யலாமா?
(a) ஆம் - 54.51% [284 வாக்குகள்]
(b) இல்லை - 45.49% [237 வாக்குகள்]
4. காயல்பட்டினம் கடற்கரை பெண்கள் வருவதற்கு பாதுகாப்பனதுதானா?
(a) ஆம் - 22.07% [115 வாக்குகள்]
(b) இல்லை - 32.25% [168 வாக்குகள்]
(c) நிச்சயமில்லை - 45.68% [238 வாக்குகள்]
5. கடற்கரையில் விளையாடுவதைத் தடை செய்யலாமா?
(a) கட்டுப்பாடு எதுவும் தேவையில்லை - 5.37% [28 வாக்குகள்]
(b) முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும் - 11.33% [59 வாக்குகள்]
(c) விளையாடுவதற்காக தனி இடம் ஒதுக்கலாம் - 83.30% [434 வாக்குகள்]
6. இரவில் பொதுமக்கள் கடற்கரையைப் பயன்படுத்துவதை எத்தனை மணிக்கு பிறகு தடை செய்யலாம்?
(a) இரவு 10.00 மணியுடன் நிறுத்தலாம் - 39.53% [206 வாக்குகள்]
(b) இரவு 10.30 மணியுடன் நிறுத்தலாம் - 15.55% [81 வாக்குகள்]
(c) இரவு 11.00 மணியுடன் நிறுத்தலாம் - 25.72% [134 வாக்குகள்]
(d) இரவு 11.30 மணியுடன் நிறுத்தலாம் - 5.76% [30 வாக்குகள்]
(e) இரவு 12.00 மணியுடன் நிறுத்தலாம் - 13.44% [70 வாக்குகள்]
7. காயல்பட்டினம் கடற்கரையை இடம் பிரிக்கலாமா?
(a) பிரிக்கவே கூடாது - 15.55% [81 வாக்குகள்]
(b) ஆண், பெண்களுக்கென இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் - 21.30% [111 வாக்குகள்]
(c) ஆண்கள், பெண்கள், குடும்பத்துடன் வருவோருக்காக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும் - 63.15% [329 வாக்குகள்]
8. காயல்பட்டினம் கடலில் குளிக்க அனுமதிக்கலாமா?
(a) ஆம் - 17.66% [92 வாக்குகள்]
(b) இல்லை - 82.34% [429 வாக்குகள்]
9. காயல்பட்டினத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னம் ஒன்றை காயல்பட்டினம் கடற்கரையில் எழுப்பலாமா?
(a) ஆம் - 79.85% [416 வாக்குகள்]
(b) இல்லை - 20.15% [105 வாக்குகள்]
தகவல்:
எல். எம். ஈ. கைலானி,
செயலர், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம். |