காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா நிறுவனத்தில், ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 146ஆவது நினைவு தின நிகழ்ச்சிகள் 24.10.2010 அன்று துவங்கி, 30.10.2010 அன்று நிறைவுற்றது.
இந்நாட்களில் தினமும் இரவு 08.15 மணி முதல் 09.15 மணி வரை, மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
24.10.2010 அன்று, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, ஷாதுலிய்யா தரீக்காவின் மகிமை என்ற தலைப்பிலும்,
ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ ஃபாழில் தேவ்பந்தீ, அண்ணலாரின் அருங்குணங்களே தரீக்காவின் சித்தாந்தம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
25.10.2010 அன்று, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, அல்லாஹ்வின் அருளைப் பெற்ற ஷெய்குமார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
26.10.2010 அன்று, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஸஹாபாக்களின் மாண்புகளே ஸூஃபித்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
27.10.2010 அன்று, மவ்லவீ எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ கலீஃபத்துஷ் ஷாதுலீ, ஷரீஅத்தின் அடிப்படையில்தான் தரீக்கா என்ற தலைப்பில் உரையாற்றினார்.
28.10.2010 அன்று, மவ்லவீ ஏ.எச்.முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, ஷாதுலிய்யா தரீக்காவும், ஸலவாத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
29.10.2010 அன்று, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, தரீக்கத்தின் அடிப்படையே தக்வா என்ற தலைப்பில் உரையாற்றினார்.
30.10.2010 அன்று அதிகாலை, வழீஃபா திக்ர் மஜ்லிஸும், திலாவத்துல் குர்ஆன் தமாமும் நடைபெற்றன.
அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற்ற ‘யவ்முல் இல்ம்‘ கல்வி தின நிகழ்ச்சியில், மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ தலைமையில் திக்ர் ஹல்கா நடைபெற்றது. பின்னர், தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து, ஜாவியா அரபிக்கல்லூரியின் மாணவர்கள் உரையாற்றினர்.
பின்னர், மவ்லவீ எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ, மவ்லவீ எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, மவ்லவீ எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர் ஃபாஸீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அன்று மாலை 05.00 மணிக்கு மனாகிப் ஷரீஃப் மவ்லித் மஜ்லிஸும், இரவு 07,45 மணிக்கு திக்ர் ஹல்காவும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் சரித்திர உரையை மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ நிகழ்த்தினார்.
இரவு 09.30 மணிக்கு நேர்ச்சை வினியோகிக்கப்பட்டு, துஆ ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
|