தூத்துக்குடி, கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மிக விரைவில் துவங்கும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னையில் நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து இரு நாட்டிற்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்வதற்காகவும் மத்திய கப்பல் துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்டோபர் மாதம் 14ஆம், 15ஆம் தேதிகளில் கொழும்புக்குச் சென்று, அங்கு இலங்கையைச் சார்ந்த துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
இரு நாடுகளுக்குமிடையே பயணியர் கப்பல் போக்குவரத்து மிக விரைவில் துவங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய கப்பல் துறை அமைச்சகம் செய்து வருகிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |