கேரள மாநிலம் திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் தலைவர் முஹம்மத் அப்துல் காதிரின் தாயார் ஏ.எஸ்.செய்யித் ராபியத்தும்மாள் இன்று காலமானார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் கண்ணியத்திற்குரிய தலைவர் முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் தாயார் ஏ.எஸ்.செய்யித் ராபியத்தும்மாள் அவர்கள் இன்று அதிகாலையில் காலமானார்கள்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் எங்கள் மன்றத் தலைவர் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்து, மேலான சுவனத்தை வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் J.A.செய்யித் சதக்கத்துல்லாஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், திருவனந்தபுரம்,
கேரள மாநிலம். |