தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 10,47,550 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த 6 தொகுதிகளிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல் 01.07.2010 தேதியில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து துணை வாக்காளர் பட்டியல் 15.09.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரவைத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ள வசதியாக, 01.07.2010இல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் 15.09.2010இல் வெளியிடப்பட்ட துணைப் பட்டியல் ஆகிய இரண்டையும் இணைத்து வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 01.07.2010இல் வெளியிடப்பட்ட பட்டியலில் 4,82,374 ஆண்கள், 4,95,816 பெண்கள் என மொத்தம் 9,78,190 வாக்காளர்கள் இருந்தனர்.
15.09.10இல் வெளியிடப்பட்ட துணைப்பட்டியலில் 35,169 ஆண்கள், 34,191 பெண்கள் என மொத்தம் 69,360 வாக்காளர்கள் இருந்தனர்.
தற்போது 2 பட்டியலையும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 5,17,543 ஆண்கள், 5,30,007 பெண்கள் என மொத்தம் 10,47,550 பேர் இடம் பெற்றுள்ளனர்.
விளாத்திகுளம்:
83,822 ஆண்கள், 84,610 பெண்கள் என மொத்தம் 1,68,432 வாக்காளர்கள்.
தூத்துக்குடி:
1,00,849 ஆண்கள், 1,00,726 பெண்கள் என மொத்தம் 2,01,575 பேர்.
திருச்செந்தூர்:
87,937 ஆண்கள், 93,412 பெண்கள் என மொத்தம் 1,81,349 பேர்.
ஸ்ரீவைகுண்டம்:
81,452 ஆண்கள், 86,864 பெண்கள் என மொத்தம் 1,68,316 பேர்.
ஓட்டப்பிடாரம் (தனி):
78,439 ஆண்கள், 77,955 பெண்கள் என மொத்தம் 1,56,394 பேர்.
கோவில்பட்டி:
85,044 ஆண்கள், 86,440 பெண்கள் என மொத்தம் 1,71,484 பேர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தூத்துக்குடி சார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் வெளியிட்டார்.
திருச்செந்தூர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை திருச்செந்தூர் கோட்டாட்சியர் பாக்கியம் தேவகிருபை வெளியிட்டார்.
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான பட்டியலை கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜோ. ரவிச்சந்திரன் வெளியிட்டார். கோவில்பட்டி வட்டாட்சியர் கந்தசாமி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மாடசாமி, தேர்தல் பிரிவு உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கு 09.11.2010 வரை மனு அளிக்கலாம். இம் மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு, 2011இல் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2011இல் வெளியிடப்படும்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |