அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் உரையாற்றினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 39ஆம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம், 25.10.2010 திங்கட்கிழமை இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.பிசண்முகநாதன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ் கருத்துரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளருமான எஸ்.நாகூர் மீரான், எஸ்.ஜெனிபர் சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
எல்.எஸ்.அன்வர், எஸ்.எம்.செய்யது காசிம், ஜே.ஜின்னா, என்.அருணாச்சலக்கனி, பி.மதியழகன், எஸ்.எம்.தைக்கா சாகிபு, அ.வஹிதா, எம்.எஸ்.எம்.ஷாபி, பி.அந்தோணி, எஸ்.எம்.அப்துல் காதர், எம்.ஜெபமாலை, கே.முத்தலிபா, பி.கணேசன், காந்தி ராமசாமி, எம்.ஐ.சாகுல் ஹமீது, எஸ்.பொன்ராஜ், வி.பி.பி.ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றி - நகர அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
N.M.அஹ்மது,
மரைக்கார்பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |