வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், உள்ளூர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் காயல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், இம்மாதம் 16, 17 தேதிகளில் நடைபெறவுள்ளது.
போட்டி ஏற்பாடுகள் குறித்து வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்திவரும் வீ-யுனைடட் கடந்த இரண்டு ஆண்டுகளாக நமதூரின் அனைத்து பகுதியில் உள்ள மக்களும் ஓரணியில் இணைந்து விளையாட வேண்டும்; விளையாட்டுத் துறை மூலம் வலுவான ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் துவங்கப்பட்ட காயல் பிரிமியர் லீக் என்ற கால்பந்தாட்ட போட்டியை நடத்திவருகின்றது.
அதே நோக்கில் இவ்வாண்டு க்ரிக்கெட் போட்டியையும் நடத்தி முடித்துள்ளது எமது க்ளப். மீண்டும் வீ-யுனைட்டெடின் புதிய முயற்சியாக, “காயல் ஒலிம்பிக்” என்ற பெயரில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவிருக்கின்றது.
போட்டிகளில் பங்கு கொள்ள விரும்புவோர், காயல்பட்டினம் அல்தாஃப் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில், தமது பெயர்களை முற்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பெயர்களைப் பதிவுசெய்ய இறுதிநாள்: 15.10.2010 மாலை 05.00 மணி வரை மட்டுமே!
நுழைவுத்தகுதி விபரங்கள் பின்வருமாறு:-
போட்டி துவக்கத்தை முன்னிட்டு, 16.10.2010 அன்று, காயல் ஒலிம்பிக் ஜோதியுடன் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலிருந்து ஊர்வலமாகக் கிளம்பும் வீரர்கள் குழு, கே.டி.எம். தெரு - தாயிம்பள்ளிவாசல் எதிரிலுள்ள மஜ்லிஸுல் கவ்து சங்கம், அப்பாபள்ளித் தெரு ரெட் ஸ்டார் சங்கம், ஸீ-கஸ்டம்ஸ் சாலையிலுள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சங்கம் வழியாக காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தை அடைகிறது.
பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது முழுமையான ஒத்துழைப்புகளைத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, 9944340481, 9842783160, 9884145525, 9940927700, 9789415003, 9994544632, 9894376281, 8056835111 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வி-யுனைட்டெட் ஸ்போர்ட்டிங் க்ளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கலாமீ யாஸர் அரஃபாத்,
கலாமீஸ் ஆயத்த ஆடையகம்,
எல்.எஃப். ரோடு, காயல்பட்டினம். |