திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி பகுதிகளில் அக்டோபர் 11ஆம் தேதி (நாளை), மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி உபமின்நிலையத்தில் வரும் 11ஆம் தேதி (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் அன்றைய தினம் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர் சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின்சார வினியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். |