இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள பெண் ஹாஜியருக்கு, காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் அமைந்துள்ள மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில் வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
07.10.2010 அன்று மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஹாஃபிழா எம்.எஸ்.முத்து ஃபாத்திமா ஆலிமா முஅஸ்கரிய்யா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். முத்துமினா ஆலிமா முஅஸ்கரிய்யா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாணவியர் மஸ்ஊதா, ஜென்னத் ளாஃபிரா ஆகியோர் வாழ்த்துப் பாடல் பாடினர். மாணவியர் ஏ.எம்.ஃபாத்திமா ஃபஸீஹா, எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா ஆகியோர் வாழ்த்துக் கவிதை வாசித்தனர்.
தைக்கா வளாகத்தில் செயல்பட்டு வரும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியை ஹாஃபிழா எஸ்.எச்.உம்மு ஹபீபா முஅஸ்கரிய்யா, ஹஜ்ஜின் தத்துவங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை, ஒய்.எஸ்.பால் ஆமினா ஆலிமா அரூஸிய்யா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்திலிருந்து இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள சுமார் 20 பெண்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 200 பெண்கள் கலந்துகொண்டனர். |