கல்லூரி மாணவியருக்கிடையேயான தகவல் தொழில்நுட்ப அறிவுப்போட்டி, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், 05.10.2010 அன்று நடைபெற்றது.
அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி துவக்கவுரையாற்றி, போட்டிகளைத் துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற போட்டிகளில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவியர் முதலிடம் பெற்றனர். அவர்களுக்கான வெற்றிக் கேடயத்தை, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஜெயந்தி வழங்கினார்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் கம்சா முகைதீன் பாராட்டிப் பேசினார். கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், கல்லூரியின் இணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஆகியோர் மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறை தலைவி ஷர்மின் மேரி ஜானகி நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
போட்டி ஏற்பாடுகளை வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். |