காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் ஆறு ஏழை சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா (சுன்னத்) செய்யப்பட்டது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் முஹ்யித்தீன் பள்ளிவாசல் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சார்ந்த சிறுவர்கள் ஆறு பேருக்கு, காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் இலவச கத்னா திட்டத்தின் கீழ், 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு சுன்னத் (கத்னா) செய்யப்பட்டது.
நகர வழமைப்படி அச்சிறுவர்களுக்கு புத்தாடை - பூமாலை அணிவித்து, அரபி பாடல்கள் - தஃப்ஸ் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கத்னா செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
கத்னா ஏற்பாடுகளை காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் மஹ்மூத் லெப்பை, நிர்வாகிகள் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், கற்புடையார் பள்ளி வட்டம் முஹ்யித்தீன் பள்ளிவாசல் நிர்வாகிகளான ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், கோமான் மீரான், முத்துச்சுடர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை, மற்றும் ஆசிரியர் மீராஸாஹிப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தஃப்ஸ் - பைத் ஏற்பாடுகளை காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் சார்பில், ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்க் அப்துல் காதிர் செய்திருந்தார். |