வரும் அக்டோபர் 09ஆம் தேதி (நாளை) சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் செயலர் ரஷீத் ஜமான், துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;:-
அன்புள்ள சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் நம் மன்றத்தின் உறுப்பினர் பொதுக்குழுக் கூட்டம் 09.10.2010 சனிக்கிழமை மாலை (நாளை மாலை) 04.00 மணிக்கு, சிங்கப்பூர் செந்தோஸாவிலுள்ள விவோசிட்டி மோனோரெய்ல் நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தின் நிறைவில், நம் மன்ற உறுப்பினரும், புது மணமகனுமான ஜவஹர் இஸ்மாஈல் மற்றும் குடும்பத்தார் அனுசரணையில் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு உணவு உபசரிப்பு நடைபெறவுள்ளது.
உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
KAYALPATNAM WELFARE ASSOCIATION
SINGAPORE
GENERAL BODY MEETING
DATE : 9 OCTOBER 2010, SATURDAY AT 4 PM
VENUE : SENTOSA
MEETING POINT : VIVOCITY MONORAIL STATION AT 4 PM
ALL MEMBERS PLEASE ATTEND PUNCTUALLY.
DINNER WILL BE SPONSORED BY NEWLY WEDDED COUPLE JAWAHAR ISMAIL AND HIS FAMILY.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். |