அளவுக்கதிகமான சுமையை ஏற்றிச்சென்ற வாகனத்திலிருந்து பொருள் கீழே விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், இடிக்கப்பட்டுள்ள எல்.கே.துவக்கப்பள்ளி வளாகத்தினருகில் சரக்கு வாகனம் ஒன்று பழைய சாமான்களை ஏற்றிச் சென்றது. அளவுக்கதிகமாக சுமை ஏற்றப்பட்டு, முறையாக கயிறு கொண்டு அவை கட்டப்படாத நிலையில் ஓட்டிச் செல்லப்பட்ட அந்த வாகனத்திலிருந்து பழைய குளிர்சாதனப் பெட்டியொன்று, அப்பகுதியிலுள்ள கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு மிக அருகில் விழுந்தது.
பொருளை எடுப்பதற்காக வாகனத்திலிருந்து வந்தவரை அங்கு நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் கண்டித்தபோது, அவர் எதிர்த்துப் பேசியதால் பேச்சு முற்றி, அங்கு கூட்டம் கூடத் துவங்கியது. பின்னர், வண்டி உரிமையாளர் வந்து சமாதானமாகப் பேசியதையடுத்து அங்கு பிரச்சினை முடிவுக்கு வந்தது. விழுந்த பொருளை எடுத்துக்கொண்டு வாகனமும் புறப்பட்டுச் சென்றது.
தகவல்:
K.முஹ்ஸின்,
முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ்,
கூலக்கடை பஜார், காயல்பட்டினம். |