காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில், மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் “ஆலிமா அரூஸிய்யா” பாடப்பிரிவும், திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கு “ஹாஃபிழத்துல் குர்ஆன்” பாடப்பிரிவும் இயங்கி வருகிறது. இப்பாடப் பிரிவுகளில் பெரும்பாலும் திருமணமாகாத பெண்களே மாணவியராக உள்ளனர்.
திருமணம் செய்துகொண்ட - குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்கள், தமக்கும் தமது வீட்டுச் சூழலுக்கேற்ப பாடப்பிரிவொன்று துவக்கப்பட வேண்டும் என்று கோரியதன் அடிப்படையில், இல்லத்தரசியருக்காக திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் கடந்த இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இப்பாடப் பிரிவில், நகரின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் ஐம்பது முதல் அறுபது இல்லத்தரசியர் மாணவியராகப் பயின்று வருகின்றனர். ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ இப்பாடப்பிரிவை நடத்தி வருகிறார்.
தினமும் இரவு 07.30 முதல் 08.30 மணி வரை நடைபெறும் இவ்வகுப்பு, எதிர்வரும் ஹஜ் பெருநாள் வரை இக்கல்லூரி அமைந்திருக்கும் தீவுத்தெரு பெண்கள் தைக்காவில் மஃரிப், இஷா தொழுகை ஆண் இமாமைக் கொண்டு ஜமாஅத்துடன் நடத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ரமழானை முன்னிட்டு விடுமுறையளிக்கப்பட்டிருந்த இவ்வகுப்பு, 02.10.2010 அன்று மீண்டும் துவங்கியுள்ளது.
இரண்டாண்டுகளுக்கு முன், 114 அத்தியாயங்களைக் கொண்ட திருமறை குர்ஆனின் முதல் அத்தியாயமான சூரா அல்ஃபாத்திஹாவில் துவங்கி, இன்று வரை 005ஆம் அத்தியாயமான சூரா அல்மாஇதாவுக்கு விளக்கவுரை வழங்கப்பட்டு வருகிறது.
இப்பாடப்பிரிவில், விரும்பும் பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியின் இறுதியிலுள்ள நீல நிற வாசகங்கள் தாமதமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
|