காயல்பட்டினத்தில் நடப்பு ஹிஜ்ரீ 1431ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு விடுமுறையளிக்கப்பட்டிருந்த அரபிக்கல்லூரிகள் மற்றும் மார்க்கக் கல்வி (தீனிய்யாத்) நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெரு - சொளுக்கார் தெருவிடையே அமைந்துள்ள முஹ்யித்தீன் பெரிய கல் தைக்காவில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவியருக்கான தீனிய்யாத் மார்க்கக் கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய நேரங்களில் இவ்வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ரமழானை முன்னிட்டு விடுமுறையளிக்கப்பட்டிருந்த இக்கல்வி நிறுவனத்திற்கு, இன்று மாலை புதிய கல்வியாண்டு துவங்கியது. இன்று மாலை 04.30 மணிக்கு நடைபெற்ற புத்தாண்டு துவக்க நிகழ்ச்சி மவ்லித் மஜ்லிஸ் மற்றும் ஸலாவத் மஜ்லிஸ் நிகழ்வுகளுடன் துவங்கியது.
மத்ரஸா முதல்வர் ஹாஜ்ஜா எஸ்.எச்.ருக்கைய்யா பீவி தலைமை தாங்கினார். ஹாஜ்ஜா ஜீனத் முனவ்வரா மவ்லித் மஜ்லிஸையும், ஹாஜ்ஜா என்.எஸ்.ஐ.முஹ்யித்தீன் ஃபாத்திமா ஸலவாத் மஜ்லிஸையும் துஆ ஓதி நிறைவு செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மத்ரஸா ஆசிரியையர், முன்னாள் மாணவியர் செய்திருந்தனர். இதுநாள் வரை தரை தளத்தில் நடத்தப்பட்டு வந்த மத்ரஸா மார்க்க வகுப்புகள், புதிதாக மாடியில் முதல் தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையடுத்து, இனி முதல் தளத்திலேயே நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. |